விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விதிஷாவில் மாதிரி வேளாண் அறிவியல் மையத்திற்கு மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் அடிக்கல் நாட்டினார்

प्रविष्टि तिथि: 14 JUN 2026 7:13PM by PIB Chennai

மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், இன்று (14.06.2026) மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் உள்ள பெர்கேடி ஜெட்டுவில், விவசாயிகளுக்கான ஒரு தனித்துவமான பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார்.  மாதிரி வேளாண் அறிவியல் மையத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டதோடு, விதிஷா, ரைசன், செஹோர், தேவாஸ் பகுதிகளுக்கான அறிவியல் விவசாய செயல்திட்டம் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய திரு சிவராஜ் சிங் சௌகான்சிறு விவசாயிக்கும் ஒருங்கிணைந்த விவசாயம், சமச்சீர் உரங்கள், சிறந்த தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் ஒரு மரியாதைக்குரிய வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவதே அரசின் நோக்கம் என்று கூறினார்.

பெர்கேடி ஜெட்டுவில் 49 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படும் வேளாண் அறிவியல் மையம், நாட்டின் முன்மாதிரியான வேளாண் அறிவியல் மையமாக விளங்கும் என்று அவர் தெரிவித்தார். இந்த வேளாண் அறிவியல் மையம் மூலம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் 113 நிறுவனங்கள், 1,700-க்கும் மேற்பட்ட வேளாண் அறிவியல் மையங்களின் ஆராய்ச்சிகள், காணொலிகள், செயல்முறை விளக்கங்கள் ஆகியவை விதிஷா பகுதி விவசாயிகளிடம் நேரடியாக எளிதில் கொண்டு செல்லப்படும் என்று அவர் தெரிவித்தார்.

விதிஷாவின் இந்த மாதிரி வேளாண் அறிவியல் மையத்தில் பயிர்களுக்கான மருத்துவமனையான 'வேளாண் மருத்துவமனை' ஒன்று நிறுவப்படும் என்றும் மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் அறிவித்தார். இங்கு, விவசாயிகள் செடிகள், இலைகள் அல்லது மண் மாதிரிகளைக் கொண்டு வந்து, விஞ்ஞானிகளிடம் காட்டினால், விஞ்ஞானிகள் பயிர் நோயைக் கண்டறிந்து உடனடியாக அதைத் தீர்க்கும் முறைகளைப் பரிந்துரைப்பார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2272712&reg=48&lang=1

***

SS/PLM/KR

 


(रिलीज़ आईडी: 2273966) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Assamese , Gujarati