புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தரவுப் பயணம்’ - 36 மணிநேர தேசிய அளவிலான மென்பொருள் உருவாக்கும் போட்டி நாளை தொடக்கம்

प्रविष्टि तिथि: 16 JUN 2026 6:25PM by PIB Chennai

தேசிய புள்ளிவிவர அலுவலகம், கல்வி அமைச்சகத்தின் புத்தாக்கக் குழுவுடன் இணைந்து, ‘வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தரவுப் பயணம்’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான மென்பொருள் உருவாக்கும் போட்டியை நடத்துகிறது. இதன் 36 மணிநேர இறுதிச் சுற்று, ஜூன் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

 

புள்ளிவிவரத் துறையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி, நாட்டின் புள்ளிவிவரக் கட்டமைப்பை நவீனமயமாக்குவதே இப்போட்டியின் முக்கிய நோக்கமாகும். இதற்காக, தரவு சேகரிப்பு, தானியங்கி அறிக்கை தயாரிப்பு, தரவு பாதுகாப்பு மற்றும் குறியாக்க முறை, தரவுத்தளங்களை அணுகுவதற்கான ஏபிஐ தளம் மற்றும் தொழில்களுக்கான தேடல் வசதி ஆகிய ஐந்து தலைப்புகளில் தீர்வுகள் கோரப்பட்டுள்ளன.

 

நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களிடமிருந்து 5,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பல்வேறு கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு, 25 இறுதிப் போட்டிக் குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் தங்களின் மென்பொருள் தீர்வுகளை உருவாக்கி, இறுதி நாளில் சமர்ப்பிப்பார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273660&reg=3&lang=1

செய்தி அடையான எண்:2273660

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2273788) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi