பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாறிய பிறகு ஓய்வூதிய சீர்திருத்தங்கள் பெருமளவிலான ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களை சென்றடைந்துள்ளது- மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
16 JUN 2026 4:55PM by PIB Chennai
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாறிய பிறகு பிரதமர் திரு நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால நிர்வாகம், ஓய்வூதிய சீர்திருத்தங்கள் ஆகியவை பெருமளவிலான ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களை சென்றடைந்துள்ளது என்று மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
ஸ்ரீ நகரில் உள்ள ஷேர் இ காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 59-வது ஓய்வுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம், 13-வது வங்கியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டபோது, மத்திய அரசு பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததாக அமைச்சர் கூறினார். தொடக்கத்தில் ஏற்பட்ட பணிச்சுமை, சேவைகளை வழங்குவதில் இருந்த சவால்கள் போன்றவை அரசு, அது சார்ந்த நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் தீர்வு காணப்பட்டதாக தெரிவித்தார். இதற்கு ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசின் ஓய்வூதியதாரர் சங்கங்கள் சிறப்பான முறையில் ஒத்துழைத்ததாக அமைச்சர் பாரட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273597®=3&lang=1
****
TV/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2273689)
आगंतुक पटल : 11