மத்திய பணியாளர் தேர்வாணையம்
குடிமைப்பணி (முதல்நிலை) தேர்வு 2026 முடிவுகள் வெளியிடப்பட்டது
प्रविष्टि तिथि:
16 JUN 2026 9:32AM by PIB Chennai
மத்திய குடிமைப்பணித் தேர்வாணையம் 2026 மே 24 அன்று நடத்திய குடிமைப்பணி (முதல்நிலை) தேர்வு 2026-ன் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், குடிமைப்பணி (பிரதான) தேர்வு 2026-ஐ எழுத தகுதி பெறுகிறார்கள். பிரதான தேர்வை எழுத விரும்புவோர் தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். பெண்கள், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி மாணவர்கள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
தேர்வு எழுதுவோர் இது குறித்த விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் 2026 ஜூன் 19 முதல் 28 வரை சமர்ப்பிக்கலாம். குடிமைப்பணித் தேர்வு 2026-ன் முழு நடைமுறை நிறைவடைந்த பிறகு தேர்வாணையத்தின் https://upsc.gov.in என்ற இணையதளத்தில் முதல்நிலை தேர்வின் மதிப்பெண்கள், கட் ஆஃப் மதிப்பெண்கள், விடைக்குறிப்புகள் பதிவேற்றம் செய்யப்படும்.
1016 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வு 2026-ல் 13,343 பேர் பிரதான தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்வர்கள் தங்களின் சந்தேகங்களை தேர்வாணையத்தின் 011-40303444 / 24041001 என்ற தொலைபேசி மூலம் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை விளக்கம் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273342®=3&lang=1
***
SS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2273476)
आगंतुक पटल : 23