பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

விவேகம், சிந்தனையுடன் கூடிய முடிவு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 16 JUN 2026 8:53AM by PIB Chennai

பொறுமை, ஞானம், தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றால் வழிநடத்தப்படும் நடவடிக்கைகள் மூலம் மகிழ்ச்சி, வளமைக்கான கதவுகள் திறக்கப்படுகின்றன என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உரிய சிந்தனை, கவனம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலம் ஒவ்வொரு வெற்றியும் கட்டமைக்கப்படுவதால் ஒவ்வொரு தீர்மானத்திற்கும் கவனமான புரிதல் தேவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்.

”எந்தவொரு செயலையும் சிந்திக்காமல் செய்யக் கூடாது என்பதை சுபாஷிதம் கூறுகிறது. சிந்தனையின்றி மேற்கொள்ளப்படும் செயல் துன்பத்திற்கு வழிவகுக்கும். அதற்கு  மாறாக கவனத்துடன் சிந்திக்கும் நபரை வெற்றியும் வளமையும் தாமாக அடையும்.”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273332&reg=3&lang=1 

***

SS/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2273474) வருகையாளர் எண்ணிக்கை : 55