MIFF banner

19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா: கனடா, பிலிப்பைன்ஸ், ஐஸ்லாந்து நாடுகளின் படைப்புகள் திரையிடப்பட்டன

உருகும் பனிப்பாறைகள், நினைவலைகள், மனிதனின் ஏக்கம், செயற்கை நுண்ணறிவின் நிச்சயமற்ற தன்மை ஆகியவை குறித்து விவரிக்கும் 'டைம் அண்ட் வாட்டர்', 'அகாபிட்டோ', 'குட் லக் டூ யூ ஆல்' ஆகிய மூன்று திரைப்படங்கள், 19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் இன்று திரையிடப்பட்டது. ஆவணப்படம், குறும்படம், அனிமேஷன் பிரிவுகளுக்கான இந்தியாவின் முன்னணி விழாவான இது ஜூன் 15 முதல் 21 வரை நடைபெறுகிறது.

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சாரா தோசா இயக்கிய 'டைம் அண்ட் வாட்டர்' என்ற ஐஸ்லாந்து ஆவணப்படம், சுற்றுச்சூழல் பாதிப்பு, குடும்பங்கள் சந்திக்கும் இழப்பு ஆகியவற்றைச் சித்தரிக்கும் ஒரு தத்துவப் பதிவாக அமைந்துள்ளது. அர்வின் பெலார்மினோ, கைலா ரொமேரோ இணைந்து இயக்கிய 'அகாபிட்டோ' என்ற பிலிப்பைன்ஸ் குறும்படம், ஒரு பந்துவீச்சு மைதானத்தின் பின்னணியில் மனித உறவுகளின் ஆழமான ஏக்கத்தையும் நினைவுகளையும் விவரிக்கிறது. இரண்டு முறை அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கார்டெல் பார்கர் இயக்கிய 'குட் லக் டூ யூ ஆல்' என்ற கனடா அனிமேஷன் குறும்படம், செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப பரிணாமம், மனித முன்னேற்றத்தின் கணிக்க முடியாத பாதைகள் குறித்து நகைச்சுவையுடனும் எச்சரிக்கையுடனும் விவாதிக்கிறது.

சுற்றுச்சூழல் தொடர்பான கவலைகள், மனித உணர்வுகள், தொழில்நுட்பக் கேள்விகளை உள்ளடக்கிய இந்தத் திரைப்படங்கள், மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் உலகளாவிய பார்வையை பிரதிபலிப்பதுடன், ஒரு வார கால சினிமா கொண்டாட்டத்திற்குத் தொடக்கமாக அமைந்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273309&reg=3&lang=1

***

SS/PD/KR

 


Great films resonate through passionate voices. Share your love for cinema with #MIFF2026. Tag us @pibmumbai on X, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at miff.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2273445   |   Visitor Counter: 9