மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இளைஞர் சங்கமம் 6-வது கட்டத்தின் கீழ் பீகார் மாணவர் குழு பஞ்சாப் மாநிலத்தில் கல்விச் சுற்றுலா

प्रविष्टि तिथि: 15 JUN 2026 6:52PM by PIB Chennai

இளைஞர் சங்கமம்' ஆறாம் கட்டத் திட்டத்தின் கீழ், ஐ.ஐ.டி பாட்னாவைச் சேர்ந்த மாணவர் குழு பஞ்சாபில் கல்வி மற்றும் கலாச்சாரச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஐ.ஐ.டி ரோப்பர் இந்த நிகழ்வை நடத்தியது.

 

இந்தக் குழுவினர் பஞ்சாப் ஆளுநர் திரு. குலாப் சந்த் கட்டாரியாவைச் சந்தித்துப் பேசினர். அப்போது ஆளுநர், இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையை நேசிக்கவும், நாட்டு முன்னேற்றத்தில் இளைஞர்கள் தீவிரமாகப் பங்களிக்கவும் கேட்டுக்கொண்டார்.

 

சுற்றுப்பயணத்தின்போது, மாணவர்கள் சண்டிகரின் புகழ்பெற்ற சுக்னா ஏரி மற்றும் அதன் திட்டமிட்ட நகர வடிவமைப்பைப் பார்வையிட்டனர். மேலும், ரோப்பரில் உள்ள ஹரப்பா நாகரிக தொல்லியல் தளம் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் இல்லம் ஆகிய இடங்களுக்கும் சென்று இந்தியாவின் பழமையான கலாச்சாரம் மற்றும் வரலாற்றை நேரில் அறிந்து கொண்டனர். இச்சுற்றுலா மாணவர்களுக்குத் தலைமைத்துவம் மற்றும் பொதுப்பணி குறித்துப் புதிய அனுபவங்களை வழங்கியது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273171&reg=3&lang=1

செய்தி அடையான எண்:2273171

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2273301) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi