பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
12 ஆண்டுகளில் பஞ்சாயத்து அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களும் புதுமைகளும்
प्रविष्टि तिथि:
15 JUN 2026 5:41PM by PIB Chennai
கடந்த 12 ஆண்டுகளில், இந்தியாவின் கிராமப்புறங்களில் குறிப்பிடத்தக்க மாற்றமும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. இது, பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை திறமையான தன்னாட்சி நிறுவனங்களாக வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய அம்சமாகும். திறன் வாய்ந்த, நிதி ரீதியாக வலுவூட்டப்பட்ட பஞ்சாயத்துகளை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையின் வழிகாட்டுதலுடன், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தொடர்ச்சியான பல முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அவை ஜனநாயகப் பரவலாக்கத்தை ஆழப்படுத்துதல், டிஜிட்டல் ஆளுகையை விரிவுபடுத்துதல், உள்ளாட்சித் திட்டமிடலை வலுப்படுத்துதல், நிதிப் பரவலாக்கத்தை மேம்படுத்துதல், நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மக்களுக்கு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன.
நிறுவனத் திறனை வலுப்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 2.70 லட்சத்திற்கும் மேற்பட்ட பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களைச் சேர்ந்த 4.10 கோடி பஞ்சாயத்து பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன. இது கிராமப்புற நிர்வாக வரலாற்றில் இணையற்ற ஒரு நிறுவன ரீதியான அணுகுமுறைச் சாதனையாகும். 33.55 லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்குப் பஞ்சாயத்து செயல்பாடு, சேவை வழங்கல், தலைமைத்துவம் குறித்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்துகளின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக, உள்ளாட்சி நிர்வாக உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் கணிசமான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
மிகவும் மாற்றத்தை ஏற்படுத்திய முன்முயற்சிகளில் ஒன்று ஸ்வாமித்வா திட்டமாகும். 2020-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம், மக்கள் வசிக்கும் கிராமப்புறங்களில் ட்ரோன் அடிப்படையிலான கணக்கெடுப்புகளை சாத்தியமாக்கியுள்ளதுடன், 2026 ஜூன் 10-ம் தேதி நிலவரப்படி, 1.92 லட்சம் கிராமங்களில் சுமார் 3.18 கோடி சொத்துரிமை அட்டைகளை விநியோகிக்கவும் வழிவகுத்துள்ளது. சொத்துரிமை குறித்த முறையான பதிவுகளை வழங்குவதன் மூலம், இத்திட்டம் சொத்து தகராறுகளைக் குறைக்கவும், கடன் பெறுவதற்கான அணுகலை மேம்படுத்தவும், பஞ்சாயத்துகளின் வருவாய் திறனை வலுப்படுத்தவும் உதவியுள்ளது.
வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்கு பஞ்சாயத்துகள் இப்போது முன்னெப்போதையும் விடச் சிறந்த முறையில் பங்களிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273104®=3&lang=1
(Release ID : 2273104)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2273254)
आगंतुक पटल : 10