அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நாட்டின் உயிரிப் பொருளாதாரம் 10 பில்லியன் டாலரிலிருந்து 190 பில்லியன் டாலராக உயர்வு : மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
15 JUN 2026 5:15PM by PIB Chennai
கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத் துறையானது, முன்னெப்போதும் இல்லாத ஒரு மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது என மதிய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். புது தில்லியில் உள்ள சிஎஸ்ஐஆர் தலைமையகத்தில், “அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத்தில் 12 ஆண்டுகால வளர்ச்சி” என்ற தலைப்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், உயிரிப் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட 20 மடங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறினார். 2014-ம் ஆண்டில் நாட்டின் உயிரிப் பொருளாதாரம் 10 பில்லியன் டாலராக இருந்த நிலையில் தற்போது அது 190 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்றார். 2030-ம் ஆண்டுக்குள் 300 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டுவதே இதன் இலக்கு என்று அவர் கூறினார்.
சந்திரனின் தென் துருவத்திற்கு அருகே வரலாற்றுச் சிறப்புமிக்க தரையிறக்கம், விண்வெளி புத்தொழில் நிறுவனச் சூழலமைப்பில் விரைவான வளர்ச்சி, வானிலை முன்னறிவிப்பில் புரட்சிகரமான மேம்பாடுகள், முக்கியத் துறைகளில் உள்நாட்டுத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி ஆகியவை குறிப்பிடத்தக்க அம்சங்களில் சில என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், அறிவியலும் தொழில்நுட்பமும் ஆய்வகங்களிலிருந்து சாதாரண மக்களின் வாழ்க்கைக்கு நகர்ந்து, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் மையத் தூணாக மாறியுள்ளன என்று அவர் கூறினார்.
சுகாதாரம், விவசாயம் முதல் விண்வெளி, வானிலை அறிவியல், உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி வரையிலான துறைகளில், புத்தாக்கம், உலகளாவிய போட்டித்திறன், தொழில்துறைப் பங்கேற்பு, தனியார் துறை ஈடுபாடு ஆகியவற்றிற்கு அரசு அளிக்கும் முக்கியத்துவம் நல்ல பலன்களைத் துரிதப்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
அணுசக்தித் துறையில் தனியார் பங்கேற்பை மிக முக்கியமான கொள்கை சீர்திருத்தங்களில் ஒன்றாக அமைச்சர் விவரித்தார். இந்த நடவடிக்கை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வலுவான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273071®=3&lang=1
(Release ID : 2273071)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2273248)
आगंतुक पटल : 13