விவசாயத்துறை அமைச்சகம்
பிரிக்ஸ் வேளாண் அமைச்சர்கள் கூட்டம் இந்தூரில் நிறைவு
प्रविष्टि तिथि:
13 JUN 2026 7:24PM by PIB Chennai
16-வது பிரிக்ஸ் வேளாண் அமைச்சர்கள் கூட்டம், இந்தியாவின் தலைமையின் கீழ், 2026 ஜூன் 12, 13 ஆகிய தேதிகளில் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்றது. கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்ற பல கூட்டங்களின் மூலம், பிரிக்ஸ் வேளாண்மைப் பணிக்குழு நான்கு முன்னுரிமைகள் குறித்து விரிவாக விவாதித்தது:
முன்னுரிமை 1: உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து, வாழ்வாதாரங்கள்
முன்னுரிமை 2: வேளாண் வர்த்தகம், ஒத்துழைப்பு
முன்னுரிமை 3: பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய, நிலையான வேளாண்மை
முன்னுரிமை 4: வேளாண்மையையும் உணவு அமைப்பையும் எதிர்காலத்திற்கு ஏற்ப தயார்படுத்துவதற்காக, புத்தாக்கம் முதலீடுகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்
உறுப்பு நாடுகளிடையே விரிவான கலந்தாய்வுகள் மூலம் எட்டப்பட்ட கூட்டுப் பார்வையையும் ஒருமித்த கருத்தையும் பிரதிபலிக்கும் வகையில், பிரிக்ஸ் வேளாண் அமைச்சர்களின் கூட்டுப் பிரகடனம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு கூட்டம் நிறைவடைந்தது.
கூட்டுப் பிரகடனத்தை இந்த இணையதள இணைப்பில் காணலாம்: https://d2jiw2zrmmyqt8.cloudfront.net/wp-content/uploads/2026/06/13131357/agriculture-doc.pdf
இந்தக் கூட்டுப் பிரகடனமானது, விவசாயிகளின் முக்கியப் பங்கை அங்கீகரித்து, உலகளாவிய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் சிறு விவசாயிகளின் பங்களிப்பை அங்கீகரிக்கிறது. நிலையான வேளாண் நடைமுறைகளை ஊக்குவித்து, அனைவரையும் உள்ளடக்கிய கிராமப்புற வளர்ச்சியை வளர்ப்பதன் மூலம், விவசாயிகளை மையமாகக் கொண்ட அணுகுமுறைகளுக்கு இது சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது. அதே நேரத்தில், புத்தாக்கம், நிலைத்தன்மை, சமத்துவம் ஆகியவற்றின் மூலம் வேளாண் அமைப்புகளின் திறனை வலுப்படுத்துவதற்கு, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே உள்ள ஒரு பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையையும் இது பிரதிபலிக்கிறது.
இக்கூட்டம், பிரிக்ஸ் நாடுகளிடையே இருதரப்பு ஒத்துழைப்புகளுக்கான வாய்ப்புகளை வழங்கியதோடு, சந்தை அணுகல், ஒத்துழைப்பு, பரஸ்பர நலன் சார்ந்த பிற விஷயங்கள் குறித்து ஆக்கப்பூர்வமான உரையாடலை எளிதாக்கியது.
இக்கூட்டத்தில், பிரிக்ஸ் நாடுகளின் வேளாண் அமைச்சர்கள், இணை/துணை அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட 100-க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272536®=48&lang=1
***
(Release ID : 2272536)
TV/PLM/KR
(रिलीज़ आईडी: 2272858)
आगंतुक पटल : 14