ரெயில்வே அமைச்சகம்
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே தேர்வு வாரிய நடைமுறைகளை ஆய்வு செய்தார்
प्रविष्टि तिथि:
12 JUN 2026 7:30PM by PIB Chennai
மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வேயின் மூத்த அதிகாரிகளுடன் ரயில்வே தேர்வு வாரியத்தின் ஆட்சேர்ப்பு செயல்முறை குறித்து உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். வெளிப்படையான, துல்லியமான, தொழில்நுட்பத்தால் செயல்படுத்தப்படும் ஒரு அமைப்பின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
ரயில்வே தனது ஆட்சேர்ப்பு செயல்முறையின் தொடர்ச்சியான வேகத்தைப் பிரதிபலிக்கும் வகையில், 2025-26-ம் நிதியாண்டில், ஆறு முக்கியப் பிரிவுகளில் உள்ள 47,084 காலிப் பணியிடங்களுக்கு, 43,781 பேரை ஆட்சேர்ப்பு செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்திய ரயில்வே, நாடு முழுவதும் உள்ள இளம் ஆர்வலர்களின் நலனுக்காக, தொழில்நுட்பம், கட்டமைக்கப்பட்ட திட்டமிடல், தொடர்ச்சியான சீர்திருத்தங்களின் ஆதரவுடன், நியாயமான, வெளிப்படையான, தகுதி அடிப்படையிலான ஆட்சேர்ப்பு முறையைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதில் உறுதியாக உள்ளது என திரு அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார்.
(Release ID : 2272308)
***
TV/PD/KR
(रिलीज़ आईडी: 2272844)
आगंतुक पटल : 13