சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
நெடுஞ்சாலைகளின் மாற்றம் : வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்திற்கு பலம் சேர்க்கிறது
प्रविष्टि तिथि:
14 JUN 2026 2:45PM by PIB Chennai
கடந்த 12 ஆண்டுகளில், இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பில் முன்னெப்போதும் இல்லாத ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழும், மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்காரியின் வழிகாட்டுதலின் கீழும், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஒரு புதிய இணைப்பு சகாப்தத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்து, பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தி, போக்குவரத்துத் திறனை மேம்படுத்தி, கோடிக்கணக்கான மக்களின் பயணத்தை எளிதாக்கியுள்ளது.
உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பைத் தேசிய வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக அங்கீகரித்து, இணைப்பை விரிவுபடுத்துதல், பயண நேரத்தைக் குறைத்தல், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துதல், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டமைமைப்பின் விரிவாக்கம், சாதனை அளவிலான கட்டுமான வேகம், விரைவுச்சாலைகளின் மேம்பாடு ஆகியவை இந்தியாவின் போக்குவரத்துச் சூழலமைப்பை மறுவடிவமைத்து, ஒரு நவீன, தன்னிறைவு பெற்ற தேசத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தியுள்ளன.
நெடுஞ்சாலைத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முன்முயற்சிகளில் ஒன்றான பாரத்மாலா பரியோஜனா, நாடு முழுவதும் சரக்கு, பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முதன்மைத் திட்டமாகும். அக்டோபர் 2017-ல் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட இத்திட்டம், ₹5.35 லட்சம் கோடி மதிப்பீட்டில் 34,800 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டம் பொருளாதார வழித்தடங்கள், இடைவழித்தடங்கள், இணைப்புச் சாலைகள், தேசிய வழித்தட செயல்திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், எல்லைச் சாலைகள், கடலோரச் சாலைகள், துறைமுக இணைப்புச் சாலைகள், விரைவுச் சாலைகள் ஆகியவற்றின் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. மார்ச் 2026 நிலவரப்படி, 26,425 கிலோமீட்டர் நீளமுள்ள திட்டங்களில், 22,590 கிலோமீட்டர் நீளமுள்ள திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக நாட்டின் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பின் விரிவாக்கம், கடந்த 12 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிக முக்கியமான உள்கட்டமைப்புச் சாதனைகளில் ஒன்றாகும். இக்கட்டமைப்பு 2014-ல் சுமார் 91,287 கிலோமீட்டர்களாக இருந்த நிலையில், 2025-26-ம் நிதியாண்டில் 1,46,572 கிலோமீட்டர்களுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இது ஏறக்குறைய 61 சதவீத வளர்ச்சியாகும்.
இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சியானது, மாநிலங்கள், பிராந்தியங்கள் முழுவதும் இணைப்பை மேம்படுத்தி, பொருட்கள், சேவைகளின் விரைவான போக்குவரத்தை எளிதாக்கி, சந்தைகளுக்கான அணுகலை மேம்படுத்தி, நாட்டின் பொருளாதார முதுகெலும்பை வலுப்படுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272639®=48&lang=1
***
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2272655)
आगंतुक पटल : 20