திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐடிஐ-களை திறம்பட மாற்றுவதற்கான உத்திசார் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி பங்கேற்பு

प्रविष्टि तिथि: 12 JUN 2026 6:45PM by PIB Chennai

மத்திய திறன் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி அவர்களின் தலைமையில், தொழிற்பயிற்சி நிறுவனங்களின் (ஐடிஐமாற்றத்திற்கான உத்திசார் ஆலோசனை மற்றும் சீர்திருத்தப் பணிக்குழுவின் முதல் கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது. இக்கூட்டம், இந்தியாவின் தொழிற்பயிற்சிச் சூழலை வலுப்படுத்துவதற்கும், தொழிற்பயிற்சி நிறுவனங்களில் நீண்டகால சீர்திருத்தங்களை நிறுவனமயமாக்குவதற்கும் ஒரு மைல்கல் முயற்சியாக அமைந்தது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ராஜஸ்தான், குஜராத், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களும், மூத்த அரசு அதிகாரிகளும், திறன் மேம்பாட்டுச் சூழலமைப்பைச் சேர்ந்த பிறரும் பங்கேற்றனர்.

நாடு முழுவதும் உள்ள தொழிற்பயிற்சி நிறுவனங்களை வலுப்படுத்துவதற்காக, சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே ஈடுபாட்டை ஏற்படுத்த இந்த கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றிய இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி, தொழிற்கல்வியை மறுவடிவமைப்பதற்கும், மாறிவரும் இந்தியாவின் வாய்ப்புகளுக்கு ஏற்ப மேலும் ஆற்றல்மிக்க, லட்சியம் நிறைந்த ஐடிஐ சூழலமைப்பை உருவாக்குவதற்குமான நமது கூட்டு உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது என்றார். ஐடிஐகளில் பயிலும் ஒவ்வொரு இளைஞருக்கும் உயர்தரமான, எதிர்காலத்திற்குத் தயாரான வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது என்று மத்திய திறன் மேம்பாட்டு துறை இணை அமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி தெரிவித்தார்.

***

(Release ID: 2272276)

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2272560) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati