இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
லடாக் எல்லையோர கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள், இந்தோ-திபெத் எல்லைக்காவல் படையினருடன் மத்திய விளையாட்டுத் துறை இணையமைச்சர் ரக்ஷா கட்சே கலந்துரையாடினார்
प्रविष्टि तिथि:
13 JUN 2026 2:37PM by PIB Chennai
கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2026 ஜூன் 11 முதல் 13-ம் தேதி வரை, லடாக் யூனியன் பிரதேசத்தின் முக்கியத்துவம் வாய்ந்த எல்லைப் பகுதிகளில் மேற்கொண்ட மூன்று நாள் பயணத்தை மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா கட்சே வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
நாட்டின் பாதுகாப்பிற்காகத் தங்களது இன்னுயிரை தியாகம் செய்த படை வீரர்களுக்கு திருமதி ரக்ஷா கட்சே மரியாதை செலுத்தினார். நாட்டின் ஆயுதப் படைகள் வெளிப்படுத்திய துணிச்சல், ஒழுக்கம், தேசபக்தி ஆகியவை ஒவ்வொரு குடிமகனுக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிப்பதுடன், நாட்டின் உறுதியையும் வலுப்படுத்துகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்கேற்பு, சமூக ஈடுபாடு, தொலைதூரப் பகுதிகள் வரையிலான வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் எல்லையோர கிராமப்புறங்களை வலுப்படுத்துவதிலும், எல்லைப் பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினருடனான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதிலும் மத்திய அரசின் உறுதிப்பாட்டை அமைச்சரின் இந்தப் பயணம் வலியுறுத்துவதாக அமைந்திருந்தது.
அவரது இந்தப் பயணத்தின் போது, மை பாரத் திட்டத்தின் மாநில இயக்குநர் திருமதி தஸ்முல் ஆரா, சாங்தாங் துணை ஆணையர் திரு நிதிஷ் ரஜோரா, இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் டிஐஜி திரு தாஷி நம்கியால், அந்தப் படைப்பிரிவின் துணை கமாண்டன்ட் திரு பிரியஞ்சன், பிற மூத்த அதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள் ஆகியோர் அமைச்சருடன் சென்றிருந்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272441®=48&lang=1
***
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2272493)
आगंतुक पटल : 10