பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேம்பட்ட ஆயுத அமைப்பு வளாகத்தை ஹைதராபாத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்

प्रविष्टि तिथि: 12 JUN 2026 8:14PM by PIB Chennai

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத்சிங், 2026 ஜூன் 12  அன்று ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தில் (டிஆர்டிஎல்) 'மேம்பட்ட ஆயுத அமைப்பு வளாகத்தை' திறந்து வைத்தார்.

இந்தியாவின் தொழில்நுட்ப மேன்மை மற்றும் தேசிய பாதுகாப்பில் டிஆர்டிஓ-வின் பங்களிப்பை அவர் பாராட்டினார். 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது, உள்நாட்டு ஏவுகணை அமைப்புகளின் செயல்பாடு இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையின் வளர்ந்து வரும் வலிமையை உலகிற்கு நிரூபித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் தற்சார்பு அவசியம் என்பதை வலியுறுத்திய அமைச்சர், ஆகாஷ் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்தியாவின் உலகளாவிய போட்டித்திறனை வெளிப்படுத்தியுள்ளன என்றார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு, 'மிஷன் சுதர்சன் சக்ரா' திட்டத்தின் மூலம் பன்நிலை ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி வருகிறது. இந்தத் திட்டம் ராணுவ மற்றும் சிவில் உள்கட்டமைப்புகளுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு அரணாக அமையும் என்று கூறினார்.

தற்போதைய மாறிவரும் போர் சூழலில், துல்லியமான தாக்குதல் திறன், ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் மின்னணு போர்முறை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார். உலகளாவிய நிச்சயமற்ற சூழலில், எத்தகைய தாக்குதலையும் தாங்கி மீண்டெழும் 'தாங்கும் திறன்' மற்றும் எதிரிக்கு அச்சத்தை ஏற்படுத்தும் 'தடுப்பு சக்தி' ஆகிய இரண்டையும் இந்தியா கொண்டிருக்க வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

நாட்டின் 'தாங்கும் திறன்மற்றும் 'தடுப்பு சக்தி' ஆகியவற்றை உருவாக்குவதில் டிஆர்டிஓ  மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத்சிங், எந்தவொரு நிலையற்ற தன்மைக்கும் இந்தியா தலைவணங்காது என்பதையும், நாட்டின் பாதுகாப்புத் தயார்நிலையில் எவ்விதக் குறைபாடுகளும் இருக்காது என்பதையும் இந்த அமைப்பு நாட்டுக்கு உணர்த்தி வருகிறது என்று கூறினார். "இன்றைய இந்தத் திறப்பு விழா, ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்வதில் விழிப்புடனும், திறமையுடனும், தற்சார்புடனும் இருக்க வேண்டும் என்ற நமது உறுதியின் அடையாளமாகும்" என்று அவர் குறிப்பிட்டார்.

நவீன கால சவால்களை எதிர்கொள்வதோடு, இந்தியாவுக்கு மூலோபாய ரீதியான நன்மைகளை வழங்கும் எதிர்கால தொழில்நுட்பங்களிலும் கவனம் செலுத்தி வரும் டிஆர்டிஓ-வின் விடாமுயற்சியைப் பாதுகாப்புத்துறை அமைச்சர் பாராட்டினார். "தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்வது மட்டுமல்லாமல், வருங்காலத் தேவைகளை முன்கூட்டியே கணிப்பதும் டிஆர்டிஓ-வின் பொறுப்பாகும். இந்தச் சவாலை அந்த அமைப்பு நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272327&reg=3&lang=1

***

TV/VK//RJ


(रिलीज़ आईडी: 2272439) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Telugu