வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறு வணிகங்களை டிஜிட்டல் மயமாக்கும் 'டிஜிடுக்கான்' திட்டம்

प्रविष्टि तिथि: 12 JUN 2026 7:34PM by PIB Chennai

இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் சுமார் 1.4 கோடி பலசரக்கு கடைகளை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில்,தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை மற்றும் ஓஎன்டிசி அமைப்பு இணைந்து 'டிஜிடுக்கான்' (DigiDukaan) திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

இதற்காக நடைபெற்ற  வட்டமேசை மாநாட்டில், முன்னணி நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கலந்துகொண்டனர். தற்போதுள்ள சிதறிய விநியோக முறையை மாற்றி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் கொள்முதலை எளிதாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இது பலசரக்கு கடைகளுக்குச் சிறந்த லாபத்தையும், விநியோகஸ்தர்களுக்குச் சந்தை விரிவாக்கத்தையும், பிராண்டுகளுக்கு நேரடி விற்பனைத் தகவல்களையும் வழங்குகிறது. ஏற்கெனவே ஹைதராபாத்தில் வெற்றி பெற்றுள்ள இத்திட்டம், ஜூன் 19 அன்று ஜெய்ப்பூரில் தொடங்கப்பட்டு, விரைவில் மும்பை, பெங்களூரு மற்றும் டெல்லி-என்சிஆர் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. நவீனத் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மூலம், இந்தியச் சில்லறை வணிகச் சூழலை மேம்படுத்தவும், சிறு வணிகர்களின் வளர்ச்சியை உறுதி செய்யவும் இந்த முன்முயற்சி பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272311&reg=3&lang=1

***

TV/VK//RJ


(रिलीज़ आईडी: 2272436) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati