சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
மலைப்பாதைகளில் மேம்பட்ட நிலச்சரிவு தடுப்பு நடவடிக்கைகள்: மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மேற்கொள்கிறது
प्रविष्टि तिथि:
12 JUN 2026 3:43PM by PIB Chennai
மலைப் பகுதிகளில் தீவிர வானிலை மாற்றங்களால் ஏற்படும் உட்கட்டமைப்பு பாதிப்புகளைத் தடுக்க மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறது. உத்தராகண்டின் சார் தாம் பாதையில் நிலச்சரிவைக் கண்காணிக்கச் செயற்கைக்கோள் அடிப்படையிலான மேம்பட்ட தொழில்நுட்பமும், இமாச்சலப் பிரதேசத்தின் தேசிய நெடுஞ்சாலை 5-ல் நிகழ்நேர நிலச்சரிவு எச்சரிக்கை அமைப்பும் நிறுவப்பட்டு வருகின்றன.
நெடுஞ்சாலைத் திட்டங்களின் துல்லியமான திட்டமிடலுக்கு இந்தியப் புவியியல் ஆய்வு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மலைச் சரிவுகளின் நிலைத்தன்மையை உறுதி செய்யக் கட்டுமானப் பணிகளுக்குக் கூடுதல் அவகாசம் வழங்கும் புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டிஎச்டிசி, டிஜிஆர்இ, ஐஐடி ரூர்க்கி போன்ற முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து நிலச்சரிவு தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மலைச் சரிவுகளை சமநிலைப்படுத்த ட்ரோன்கள், லிடார் ஆய்வுகள், டிஜிட்டல் நிலப்பரப்பு மாதிரிகள் ஆகிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உயர் இழுவிசை கொண்ட எஃகு கம்பி வலைகள், முறையான நீர் வடிகால் மேலாண்மை ஆகியவற்றின் மூலம் மண் சரிவுகள் தடுக்கப்படுகின்றன. மேகாலயாவில் மூங்கில் பலகைகள், வெட்டிவேர் புற்கள் போன்ற இயற்கை சார்ந்த தீர்வுகளும் பயன்படுத்தப்படுகின்றன. உத்தராகண்டில் மட்டும் 58 நிலச்சரிவு பகுதிகள் சரி செய்யப்பட்டுள்ளன. இத்தகைய அறிவியல் பூர்வமான நடவடிக்கைகள் மூலம் மலைப் பிராந்தியங்களில் பாதுகாப்பான, நிலையான போக்குவரத்து வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272109®=48&lang=1
***
TV/PD/RJ
(रिलीज़ आईडी: 2272243)
आगंतुक पटल : 10