வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையத்தின் 13-வது கூட்டத்தில் மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா பங்கேற்றார்

प्रविष्टि तिथि: 04 JUN 2026 8:31PM by PIB Chennai

வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையத்தின் 13-வது கூட்டத்தில் மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா பங்கேற்றார். மேகாலய முதலமைச்சர் திரு கான்ராட் கே சங்மா, இணையமைச்சர் திரு சுகந்தா மஜும்தார், வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மைய சங்கத்தின் துணை தலைவரும் விண்வெளித்துறை செயலாளரும் இஸ்ரோ தலைவருமான டாக்டர் வி நாராயணன், மத்திய அரசு, வடகிழக்கு மாநிலங்களின் உயரதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய திரு சிந்தியா, பிராந்திய மேம்பாடு, பேரிடர் தயார் நிலை, பருவநிலைக்கேற்ற நிர்வாகம், அறிவியல் கண்டுபிடிப்பு, தரவு சார்ந்த கொள்கை உருவாக்கம் ஆகியவற்றில் வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையத்தை ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நிறுவனமாக அமைப்பதற்கான ஐந்து முக்கிய உத்திகள் குறித்து எடுத்துரைத்தார். இவற்றில் உயர்-தெளிவுத்திறன் கொண்ட கிராம வள வரைபடம் தயாரித்தல், சதுப்பு நிலங்கள், காடுகள், ஆறுகள், நிலப்பரப்புகளைத் தொடர்ந்து கண்காணித்தல், வடகிழக்கு பிராந்தியத்தில் புவிசார் விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தல், அனைத்து வகையான பேரிடர்களையும் தாங்கும் திறன் கொண்ட ‘என்.ஈ.ஆர்.-ஷீல்ட்' எனும் டிஜிட்டல் இரட்டை தளத்தை உருவாக்குதல், வடகிழக்கு பசுமைச் செல்வம், இயற்கை மூலதனக் கணக்கியல் கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.

 

வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மைய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்ததுடன், வடகிழக்கு பிராந்தியத்தில் வளர்ச்சியை விரைவுபடுத்த விண்வெளி தொழில்நுட்பம், செயற்கைக்கோள் பயன்பாடுகள், புவிசார் நுண்ணறிவு ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த எதிர்காலத் திட்ட வரைபடம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269069&reg=3&lang=1

***

SS/IR/LDN/RJ


(रिलीज़ आईडी: 2272207) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Assamese , Manipuri