மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில், கடல் உணவு ஏற்றுமதி குறித்த தேசிய அளவிலான பயிலரங்கம்
प्रविष्टि तिथि:
05 JUN 2026 7:29PM by PIB Chennai
ஆந்திரப் பிரதேச மாநில அரசின் ஆதரவுடன், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து, கடல் உணவு ஏற்றுமதி குறித்த தேசிய அளவிலான பயிலரங்கை 2026 ஜூன் 5, 6 ஆகிய தேதிகளில், ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடத்தியது. பல்வேறு மாநிலங்கள், துறை சார்ந்த தரப்பினர்களை உள்ளடக்கிய இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதிச் சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கான விரிவான செயல் திட்டத்தை வகுக்கும் நோக்கில் இந்த பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு சந்திரபாபு நாயுடு, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ராம்மோகன் நாயுடு, மத்திய உணவு பதனப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் திரு. சிராக் பாஸ்வான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பயிலரங்கில் மத்திய அரசின் உயர் அதிகாரிகள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், ஏற்றுமதி ஆய்வு மன்றம், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், நபார்டு, என்சிடிசி, என்சிஇஎல், எஸ்எப்ஏசி, இன்வெஸ்ட் இந்தியா உள்ளிட்ட முக்கிய தேசிய நிறுவனங்கள் இதில் பங்கேற்றன. மேலும், கடல் உணவு ஏற்றுமதியாளர்கள், தொழில்சங்கங்கள், பதனப்படுத்துநர்கள், புத்தொழில் நிறுவனங்கள், விநியோக நடைமுறைகள் தொடர்புடைய பிற தரப்பினர், இந்த பயிலரங்கில் பங்கேற்றதன் மூலம், கடல் உணவு ஏற்றுமதிச் சூழல் அமைப்பின் விரிவான பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269489®=3&lang=2
***
SS/SV/RJ
(रिलीज़ आईडी: 2272201)
आगंतुक पटल : 12