இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற ஒரே இலக்கை நோக்கி மை பாரத், என்.எஸ்.எஸ் ஆகியவை செயல்படுகின்றன: மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா

प्रविष्टि तिथि: 30 MAY 2026 7:47PM by PIB Chennai

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் விவகாரங்கள் துறை சார்பாக நடைபெற்ற  இரண்டு நாள் சிந்தனை முகாம், ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சி, இளைஞர் விவகாரங்கள் துறை அதிகாரிகளையும், மை பாரத், மை பாரத் தேசிய சேவைத் திட்ட அதிகாரிகளையும் ஒன்றிணைத்தது.

இரண்டாம் நாள் நிகழ்வில், மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே, இளைஞர் விவகாரங்கள் துறைச் செயலாளர் டாக்டர் பல்லவி ஜெயின் கோவில், கூடுதல் செயலாளர் திரு நிதேஷ் குமார் மிஸ்ரா, மை  பாரத் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் பிரியங்கா சுக்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, “மை பாரத் மற்றும் என்எஸ்எஸ் ஆகியவை ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற ஒரே இலக்கை நோக்கிச் செயல்படும் இளைஞர் மேம்பாட்டின் இரண்டு தூண்கள் ஆகும். என்எஸ்எஸ், இளைஞர்களை வளாகங்களில் இணைக்கிறது, மை பாரத், அவர்களைக் களத்தில் ஈடுபடுத்துகிறது. இவை இரண்டும் இணைந்து, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு சக்திவாய்ந்த இயக்கத்தை உருவாக்கக் கூடும்” என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267078&reg=3&lang=1  

***

SS/BR/RJ


(रिलीज़ आईडी: 2272160) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी