பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பல்வேறு துறைகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிக்கும் அரசின் முயற்சிகளை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்

प्रविष्टि तिथि: 12 JUN 2026 12:39PM by PIB Chennai

கடந்த 12 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட முன்முயற்சிகள் காரணமாக பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தொழில்முனைவு முதல், கல்வி, சுகாதாரம், தூய்மைப் பணிகள், வீட்டுவசதி, விளையாட்டு, அறிவியல், நிர்வாகம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பெண்கள் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கண்ணியம், வாய்ப்புகள், அதிகாரமளித்தல் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். பெண்கள் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தவும், நாட்டைக் கட்டமைப்பதற்கான நடவடிக்கைகளில் வலுவான பங்களிப்பை வழங்குவதற்கு ஏதுவாக இத்தகைய நடவடிக்கைகள் உதவிகரமான அமைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அறிவியல், விண்வெளி, புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட துறைகளில் பெண்கள் சாதனைப் படைத்து வருவதற்கு பிரதமர் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார். ட்ரோன் தொழில்நுட்பம் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருவது புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மாற்றியமைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பெண்களை பொருளாதார ரீதியாக சுதந்திரமாக செயல்படும் வகையில், பெரும் பங்காற்றி வரும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மத்திய அரசு ஆதரவளித்து வருவதாக அவர் கூறினார்.

நாட்டைக் கட்டமைப்பதற்கான அடித்தளமாக இந்தியாவின் பெண் சக்தி திகழ்கிறது என்று கூறிய பிரதமர், இது தொடர்பான சமஸ்கிருத சுபாஷிதத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சமூக ஊடக  எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள தொடர்ச்சியான பதிவுகளில் கூறியிருப்பதாவது:

“கடந்த 12 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பணியாற்றி வருகிறது. இதன் பலனை பல்வேறு துறைகளின் வளர்ச்சியிலும் காணமுடியும்.

ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்து வரும் பெண்கள் பாரத மாதாவின் பெருமையை உயர்த்தி வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272012&reg=48&lang=1    

***

TV/SV/KPG/RJ


(रिलीज़ आईडी: 2272067) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam