விண்வெளித்துறை
விண்வெளித் துறையில் முதலீடுகளை அதிகரிக்கத் தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அழைப்பு விடுத்துள்ளார்
प्रविष्टि तिथि:
11 JUN 2026 5:43PM by PIB Chennai
உலக அளவில் போட்டியிடக்கூடிய உள்நாட்டுத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், வெளிநாட்டு ஆதாரங்களைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கவும், இந்தியாவின் விண்வெளித் துறையில் முதலீடுகள் கணிசமான அளவில் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார்.
விண்வெளித் துறையின் தொழில் இணைப்பு குறித்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், இந்தியாவின் புத்தொழில் நிறுவனங்களுக்கான சூழல் அமைப்பு குறிப்பிடத்தக்க புதுமை, தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதேவேளையில், உலகளவில் விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியா முன்னிலை பெறுவதற்கு, ஏற்கனவே நன்கு செயல்படும் தொழில் நிறுவனங்களின் வலுவான பங்கேற்பு அவசியம் என்றும், அதற்கு மேம்பட்ட நிதி ஒதுக்கீடு, வலுவான உற்பத்தி கட்டமைப்பு, சந்தை வாய்ப்புகள் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் விண்வெளித் துறை தனியார் நிறுவனங்களும் பங்கேற்பதற்கான சூழல் உருவாக்கப்பட்டது என்றும், முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை இது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
மறைந்திருந்த தொழில்முனைவோர் திறனை வெளிக்கொண்டு வருவதற்கும், குறுகிய காலத்திற்குள் நாட்டின் விண்வெளிச் சூழல் அமைப்பை மாற்றியமைப்பதற்கும் ஏற்ற வகையில் இத்தகைய சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒரு துணிச்சலான முடிவு என்று அவர் கூறினார்.
நாட்டின் விண்வெளித் துறையில், முதலீடுகளை அதிகரிப்பதற்கு தொழில்நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271728®=3&lang=1
***
TV/VK/RJ
(रिलीज़ आईडी: 2272054)
आगंतुक पटल : 5