திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
இந்தியா-மொரிஷியஸ் நாடுகளுக்கு இடையேயான பணியாளர் பரிமாற்ற நடவடிக்கைகள் உத்வேகம் பெற்று வருகிறது
प्रविष्टि तिथि:
10 JUN 2026 5:53PM by PIB Chennai
இந்தியா - மொரிஷியஸ் நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட அரசுகளுக்கு இடையேயான தொழிலாளர் பரிமாற்றக் கட்டமைப்பின் கீழ், 14 திறன்வாய்ந்த இந்தியத் தொழிலாளர்கள் குழு மொரிஷியஸ் புறப்பட்டுச் சென்றது. இக்குழுவை மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு. ஜெயந்த் சவுத்ரி வழியனுப்பி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ், ஏற்கனவே மொரிஷியஸ் சென்று, பணியைத் தொடங்கியுள்ள முதல் தொகுதி இந்தியத் தொழிலாளர்களின் வெற்றிகரமான பணி நியமனத்தைத் தொடர்ந்து, இந்தக் குழு அந்நாட்டிற்குச் செல்கிறது. மேலும் 14 தொழிலாளர்கள் செல்வதுடன், கூடுதலாக 33 தொழிலாளர்கள் தற்போது பணி அனுமதி, ஆவணச் நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். வெளிப்படையான, அரசால் ஆதரிக்கப்படும் கட்டமைப்பின் கீழ், இந்திய இளைஞர்களுக்கு முறையான வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை சீராக நடைபெறுவதை இந்த முயற்சி உறுதி செய்கிறது.
மொரிஷியஸ் செல்லும் தொழிலாளர்களிடையே பேசிய மத்திய அமைச்சர் திரு. ஜெயந்த் சவுத்ரி, இந்தியாவின் திறன் வாய்ந்த பணியாளர்கள் தங்களது திறமை, தொழில்முறை அணுகுமுறை, சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் தன்மை ஆகிய பண்புகளுக்காக உலக நாடுகளால் பெரிதும் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியா-மொரிஷியஸ் நாடுகளிடையேயான இடப்பெயர்வு ஒப்பந்தம் உத்வேகம் பெற்று வரும் நிலையில், உலகளவில் உள்ள நிறுவனங்கள் இந்தியத் தொழிலாளர்களின் திறமை மீது கொண்டுள்ள நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது. இந்த தொழிலாளர்கள், தொழில்முறைத் திறன்களுடன், உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கத் தயாராக இருக்கும் நம்பிக்கையுடன் பணிக்குச் செல்கின்றனர்.
நம்பகமான அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் மூலம், பாதுகாப்பான, வெளிப்படையான, குறிக்கோள் சார்ந்த சர்வதேச வேலைவாய்ப்பிற்கான வழிவகைகளை அரசு உருவாக்கி வருகிறது. அதே வேளையில், விரைவான மாற்றம் கண்டு வரும் உலகில் இந்தியத் தொழிலாளர்கள் வெற்றி பெறவும், சிறந்து விளங்கவும் தேவையான திறன்களைப் பெற்றிருப்பதை அரசு உறுதி செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271236®=48&lang=1
***
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2271445)
आगंतुक पटल : 8