மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

யுவ சங்கமம் ஆறாவது கட்டம்: ஆந்திர மாநில இளைஞர்களின் மகாராஷ்டிரப் பயணம்

प्रविष्टि तिथि: 10 JUN 2026 6:49PM by PIB Chennai

ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ், மத்திய உயர்கல்வித்துறை 'யுவ சங்கமம்' 6ம் கட்ட நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ஆந்திரப் பிரதேசத்தின் ..டி. திருப்பதி மாணவர் குழு, மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள ..எஸ்..ஆர்  நிறுவனத்தால் வரவேற்கப்பட்டு, ஐந்து நாட்கள் அங்கு தங்கி மகாராஷ்டிராவின் கலாச்சாரம் மற்றும் வளர்ச்சிப் பணிகளை நேரில் கண்டறிந்தனர்.

இந்தக் குழுவினர் 2026 ஜூன் 8 அன்று மகாராஷ்டிர ஆளுநர் திரு. ஜிஷ்ணு தேவ் வர்மாவை மும்பையில் சந்தித்துப் பேசினர். அப்போது நாட்டின் வளர்ச்சி, தலைமைத்துவம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு குறித்து ஆளுநர் உரையாற்றினார்.

மேலும், ஜூன் 5 அன்று மாணவர்கள் மாநிலத்தின் சுற்றுலா மற்றும் கிராமப்புற மேம்பாட்டை அறியும் பயணத்தை மேற்கொண்டனர். ஜெஜுரியில் உள்ள புகழ்பெற்ற கந்தோபா கோயிலைப் பார்வையிட்ட மாணவர்கள், 'ஆதர்ஷ் கவான்' என அழைக்கப்படும் அடச்சிவாடி கிராமத்திற்குச் சென்றனர். அங்கு கிராம மக்கள் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் கலந்துரையாடி, கிராமப்புற வளர்ச்சி, நிர்வாகம் மற்றும் சமூக பங்கேற்பு மூலம் ஒரு கிராமம் எவ்வாறு மாற்றமடைகிறது என்பதைப் புரிந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271282&reg=3&lang=1

***

TV/VK/RJ


(रिलीज़ आईडी: 2271442) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu