மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

டிஜிலாக்கரில் மின்சாரக் கட்டணங்கள்: புதிய வசதியை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு

இடுகை இடப்பட்ட நாள்: 10 JUN 2026 9:15PM by PIB Chennai

'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ் இயங்கும் டிஜிலாக்கர் செயலியில், நாடு முழுவதும் உள்ள 68 மின் விநியோக நிறுவனங்கள் மற்றும் மின்சாரத் துறைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள லட்சக்கணக்கான மின் நுகர்வோர், தங்கள் மின்சாரக் கட்டணங்களை நேரடியாக டிஜிலாக்கர் செயலி மூலமே பாதுகாப்பாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

இனி மின்சாரக் கட்டணங்களை மின்னஞ்சலில் தேடுவதோ, காகித வடிவில் சேமித்து வைப்பதோ அல்லது அலுவலகங்களுக்குச் செல்வதோ தேவையில்லை. பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம் பி.எஸ்..எஸ். மற்றும் நொய்டா பவர் நிறுவனம் உள்ளிட்ட முக்கிய பொது மற்றும் தனியார் மின் விநியோக நிறுவனங்கள் இதில் அடங்கும். இந்த ஒருங்கிணைப்பு, குடிமக்களுக்குத் தேவையான ஆவணங்களை டிஜிட்டல் முறையில் எளிதாகவும் பாதுகாப்பாகவும் அணுக வழிவகை செய்கிறது. இது இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271375&reg=48&lang=1

***

 

TV/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2271435) வருகையாளர் எண்ணிக்கை : 61
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu