பிரதமர் அலுவலகம்
குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்த அன்பான வாழ்த்துகளுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
10 JUN 2026 7:25PM by PIB Chennai
இந்தியாவின் பிரதமராக 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள திரு. நரேந்திர மோடி -க்கு குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள அன்பான வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் நம்பிக்கையும், ஆசியும், தேச சேவையில் மேலும் கடுமையாக உழைக்கத் தன்னை ஊக்குவிப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
வளமான நமது நாகரிகப் பாரம்பரியம் குறித்துப் பெருமிதம் கொள்ளக்கூடிய வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கம், தனது அனைத்து முயற்சிகளுக்கும் தொடர்ந்து வழிகாட்டியாக அமையும் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். இந்திய மக்களின் கனவுகளையும், லட்சியங்களையும், நிறைவேற்றுவதில் எவ்வித முயற்சியும் தொய்வின்றி மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்த, அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி.
இந்திய மக்களின் நம்பிக்கையும், ஆசியும், தேச சேவையில் மென்மேலும் கடுமையாக உழைக்க என்னை ஊக்குவிக்கின்றன. வளமான நமது நாகரிகப் பாரம்பரியத்தைக் குறித்துப் பெருமிதம் கொள்ளக்கூடிய வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் சிந்தனை எனது அனைத்து முயற்சிகளுக்கும் தொடர்ந்து வழிகாட்டியாக அமையும். சக இந்திய மக்களின் கனவுகளையும், லட்சியங்களையும், நிறைவேற்றுவதில் எவ்வித முயற்சியும் குறைவின்றி மேற்கொள்ளப்படும்.
***
(Release ID: 2271293)
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2271425)
आगंतुक पटल : 48
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam