உரங்கள் துறை
azadi ka amrit mahotsav

பஞ்சாபின் 2026-ஆம் ஆண்டு காரீஃப் பருவத்திற்குத் தேவையான யூரியாவைத் தடையின்றி வழங்க மத்திய அரசு உறுதி

प्रविष्टि तिथि: 10 JUN 2026 6:29PM by PIB Chennai

பஞ்சாப் மாநிலத்தின் 2026 காரீஃப் வேளாண் பருவத்திற்குத் தேவையான யூரியா உரத்தை மத்திய அரசு தாராளமாக வழங்கியுள்ளது. ஜூன் 9, 2026 வரையிலான தேவையாக 9 லட்சம் மெட்ரிக் டன் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு 10.71 லட்சம் மெட்ரிக் டன்னை வழங்கியுள்ளது. இதில் 6.25 லட்சம் மெட்ரிக் டன் விற்பனையாகி, மீதம் 4.46 லட்சம் மெட்ரிக் டன் கையிருப்பு உள்ளது. மேலும், சுமார் 0.39 லட்சம் மெட்ரிக் டன் உரம் மாநிலத்தை வந்தடைந்து கொண்டிருக்கிறது. அமிர்தசரஸ் மாவட்டத்தில் மட்டும் 33 லட்சம் மெட்ரிக் டன் உரம் இருப்பில் உள்ளது.

சர்வதேச அளவில் நிலவும் போர்ச் சூழலால் உர விநியோகத்தில் சவால்கள் இருந்தாலும், மத்திய அரசு உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் விவசாயிகளுக்குத் தட்டுப்பாடின்றி உரங்களை வழங்கி வருகிறது. மத்திய அரசு உரங்களை வழங்கினாலும், அவற்றை விவசாயிகளுக்குச் சரியாக விநியோகம் செய்வதும், பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையைத் தடுப்பதும் மாநில அரசின் கடமையாகும். முறைகேடுகளைத் தடுக்க மாநில அதிகாரிகளுடன் இணைந்து மத்திய அரசு கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. விவசாயிகள் பயமின்றித் தங்கள் வேளாண் பணிகளைத் தொடரலாம் என அரசு உறுதி அளித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271269&reg=3&lang=1

***

TV/VK/RJ


(रिलीज़ आईडी: 2271416) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi