அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்திய வர்த்தக சபை பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்தனர்
प्रविष्टि तिथि:
10 JUN 2026 5:00PM by PIB Chennai
இந்திய வர்த்தக சபை தலைவர் திரு பிரிஜ் பூஷன் அகர்வால் தலைமையிலான பிரதிநிதிகள் மத்திய அறிவியல் தொழில்நுட்பம் புவிஅறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை புதுதில்லியில் இன்று சந்தித்தனர். அப்போது மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சி, மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுவதற்கான தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். அம்மாநிலத்தில் தங்களுடைய முதலீட்டு முயற்சிகள் குறித்து அமைச்சரிடம் விளக்கினார்கள்.
மேற்கு வங்க மாநிலத்தில் தங்களுடைய உறுப்பு நிறுவனங்கள் மூலம் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்ப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர். அம்மாநிலத்தின் பொருளாதார சாத்தியக் கூறுகள் மீது தொழில்துறை கொண்டுள்ள நம்பிக்கையை இந்த முதலீட்டு முயற்சிகள் பிரதிபலிப்பரதாக குறிப்பிட்டனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் புதிய நம்பிக்கையும் நேர்மறையான சூழலும் நிலவுவதாக பிரதிநிதிகள் தெரிவித்தனர். இந்தச் சூழல் பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்துவதற்கும் முக்கிய முதலீட்டு மையமாக அம்மாநிலத்தின் நிலையை வலுப்படுத்தவும் உதவும் என்று தாங்கள் கருதுவதாக தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271203®=3&lang=1
***
TV/IR/KPG/RJ
(रिलीज़ आईडी: 2271387)
आगंतुक पटल : 7