அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

விமானவியல், பாதுகாப்பு, விண்வெளி, மின்சார வாகனப் பயன்பாடுகளுக்கான உள்நாட்டுத் தொழில்நுட்பங்களின் வணிகமயமாக்கல் நடவடிக்கைகளுக்கான முயற்சிகள்

प्रविष्टि तिथि: 10 JUN 2026 3:37PM by PIB Chennai

மேம்பட்ட உற்பத்தி, உத்திசார் தொழில்நுட்பங்களுக்கான உலகின் மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்யும் வகையில், பல்வேறு  முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்பட்டு வரும்தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், "விண்வெளி, பாதுகாப்புக்கான வான்வழி இணைப்புகள், மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றிகள் போன்ற செயல்பாடுகளை வணிகமயமாக்குதல் திட்டத்திற்காக, பெங்களூருவைச் சேர்ந்த டிஐஇஏ கனெக்டர்ஸ் என்ற தனியார்  நிறுவனத்திற்கு ஆதரவளித்துள்ளது. விமானவியல், பாதுகாப்பு, விண்வெளி, மின்சார வாகனப் பயன்பாடுகள் உள்ளிட்ட உத்திசார்வளர்ந்து வரும் துறைகளுக்கான உயர் நம்பகத்தன்மை கொண்ட மின் இணைப்பிற்கான அமைப்புகளை வடிவமைத்து உற்பத்தி செய்வதில்உள்நாட்டுத் திறன்களை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

நவீன மின்னணு, மின் இயந்திர அமைப்புகளில் மின்சார இணைப்பான்கள் மிக முக்கிய அம்சமாகும். சவாலான இயக்கச் சூழல்களிலும் மின்சாரம், சமிக்ஞைகள், தரவுகளின் தடையற்ற பரிமாற்றத்தை இவை உறுதி செய்கின்றன. நம்பகத்தன்மைசெயல்பாட்டுப் பாதுகாப்பு போன்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களில், விண்வெளி, பாதுகாப்பு போன்ற சவாலான துறைகளில், இணைப்புகள் கடும் அதிர்வு, வெப்பநிலை, சுற்றுச்சூழல் அழுத்த நிலைகளின் கீழ் அதன் செயல்திறனைத் தக்கவைத்துக் கொள்வது அவசியமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271121&reg=3&lang=1

 

***

SS/SV/RJ


(रिलीज़ आईडी: 2271332) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Kannada