ஜவுளித்துறை அமைச்சகம்
ஜவுளித் துறை வளர்ச்சிக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் கீழ், மேலும், 96 நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
प्रविष्टि तिथि:
10 JUN 2026 3:16PM by PIB Chennai
ஜவுளித் துறை வளர்ச்சிக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ், 22 புதிய விண்ணப்பதாரர்களுக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. புதிதாக ஒப்புதல் அளிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் மொத்தம் ரூ 2,339.14 கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும், அறிவிக்கப்பட்ட தயாரிப்புகள் வாயிலாக ரூ.15,561.34 கோடி மதிப்பிலான வர்த்தகப் பரிவர்த்தனைகள் நடைபெறும் என்றும், இத்துறையில், 36,217 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூன்றாம் சுற்றில், மொத்தம் 96 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் மொத்தம் ரூ.12,822.67 கோடி முதலீடும், ரூ.58,294.18 கோடி மதிப்பிலான வர்த்தகப் பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒப்புதல் பெற்ற நிறுவனங்கள், செயற்கை இழை ஆடைகள், செயற்கை இழைத் துணிகள், தொழில்நுட்பம் சார்ந்த ஜவுளிகள் போன்ற உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின் முக்கியப் பிரிவுகளைச் சார்ந்தவை ஆகும். இதன் மூலம், மதிப்பு கூட்டப்பட்ட ஜவுளி உற்பத்திக்கான உலகின் மையமாக இந்தியா உருவெடுக்கும்.
ஜவுளித் துறையில், வளர்ந்து வரும் முக்கியப் பிரிவுகளில், முதலீடுகளை ஊக்குவிக்க மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் தொழில்துறையினரிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதை, இத்தகைய நடவடிக்கைகள் பிரதிபலிப்பதாக உள்ளன.
இத்துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள், உற்பத்தித் திறன் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள், தற்சார்பு இந்தியாவிற்கானத் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, வலுவான, உலகளவில் போட்டியிடக்கூடிய வகையில், ஜவுளித் துறையை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271102®=3&lang=1
***
SS/SV/RJ
(रिलीज़ आईडी: 2271287)
आगंतुक पटल : 11