புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், சிறிய அளவிலான நீர்மின் மேம்பாட்டுத் திட்டம் குறித்த தேசிய பயிலரங்கை நடத்தியது
प्रविष्टि तिथि:
09 JUN 2026 7:04PM by PIB Chennai
மத்திய அரசின் புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், சிறிய அளவிலான நீர்மின்சக்தி் மேம்பாட்டுத் திட்டம் குறித்த தேசியப் பயிலரங்கை இன்று (09.06.2026) புதுதில்லியில் நடத்தியது. இந்தப் பயிலரங்கில், மாநில அரசுகள், மாநில ஒருங்கிணைப்பு முகமைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், சிறிய அளவிலான நீர்மின்சக்தித் துறையுடன் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
வரவேற்புரை ஆற்றிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு ராஜேஷ் குல்ஹாரி, நாட்டின் பயன்படுத்தப்படாத பரந்த நீர்மின் ஆற்றலை வெளிக்கொணர்வதில், புதிதாக அங்கீகரிக்கப்பட்ட சிறிய அளவிலான நீர்மின் மேம்பாட்டுத் திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். நீர்மின்சக்தி என்பது இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொகுப்பில் ஒரு முக்கிய அங்கமாகும் என்றும், இது குறிப்பாக மலைப்பாங்கான, தொலைதூர, எல்லைப் பகுதிகளில் மின்கட்டமைப்பின் நிலைத்தன்மைக்கு கணிசமாகப் பங்களிக்கும் என்றும் அவர் கூறினார். இத்திட்டத்தின் கீழ் நீர் மின் திட்டங்களை உரிய நேரத்தில் செயல்படுத்துவதை உறுதிசெய்ய, மாநிலங்கள், சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆகியோரின் தீவிரப் பங்கேற்பு அவசியம் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்..
இந்தப் பயிலரங்கில் ஒரு விரிவான கலந்துரையாடல் அமர்வும் இடம்பெற்றது. அதில், மாநிலங்கள், தொழில் துறையினர் ஆகியோர், திட்ட ஒதுக்கீடு, அனுமதிகள், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு, நிதியுதவி, செயலாக்கக் காலக்கெடு போன்றவை தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இந்தக் கலந்துரையாடல்கள், இத்திட்டத்தைத் திறம்படச் செயல்படுத்துவதற்கு மதிப்புமிக்க கருத்துக்களை வழங்கின.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270854®=3&lang=1
(Release ID : 2270854)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2270924)
आगंतुक पटल : 10