பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கர்ப்பிணிப் பெண்களுக்கான மத்திய அரசின் நலத்திட்டம், அவர்களது நலனை உறுதி செய்துள்ளது: மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி

प्रविष्टि तिथि: 09 JUN 2026 2:45PM by PIB Chennai

பிரதமரின் சுரக்ஷித் மாத்ரித்வ அபியான் எனப்படும் பாதுகாப்பான தாய்மை இயக்கம்  குறித்து, மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

"ஒவ்வொரு புதிய உயிரும் தாயின் கருப்பையில் தொடங்குகிறது. கர்ப்பத்தின் ஒவ்வொரு கட்டத்திற்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான, மரியாதைக்குரிய பராமரிப்பைப் பெறுவதற்கான உரிமை உண்டு. கடந்த பத்து ஆண்டுகளில், பிரதமரின் சுரக்ஷித் மாத்ரித்வ அபியான் (பாதுகாப்பான தாய்மை இயக்கம்), லட்சக்கணக்கான கர்ப்பிணிப் பெண்களுக்கு சரியான நேரத்தில் மருத்துவப் பரிசோதனைகள், ஆலோசனைகள், மேம்படுத்தப்பட்ட தாய்மை நலச் சேவைகளை வழங்குகிறது. இதன் மூலம், பாதுகாப்பான தாய்மை என்பது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. இது வெறும் திட்டம் மட்டுமல்ல. ஒவ்வொரு தாய்க்கும், பிறக்காத குழந்தைக்கும் ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான அரசின் அர்ப்பணிப்பாகும். இந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட முயற்சி, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் தாய்மை நலப் பயணத்தை மறுவடிவமைத்து, லட்சக்கணக்கான தாய்மார்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது."

(Release ID : 2270667)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2270916) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Kannada