வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
கடல் உணவு ஏற்றுமதி குறித்த 2 நாள் தேசிய பயிலரங்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
09 JUN 2026 12:01PM by PIB Chennai
கடல் உணவு ஏற்றுமதி குறித்த 2 நாள் தேசிய பயிலரங்கு விசாகப்பட்டினத்தில் 2026 ஜூன் 5-6-ல் நடைபெற்றது. மத்திய உணவுப் பதனப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம், மீன்வளத்துறையுடன் இணைந்து மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சகத்தின் வர்த்தகத்துறை இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. மதிப்புக்கூட்டுதல், சந்தை அணுகலை மேம்படுத்துதல், புதுமை கண்டுபிடிப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதிகளை மேம்படுத்துவது தொடர்பான விவாதங்களுக்கான தளமாக இந்தப் பயிலரங்கு நடத்தப்பட்டது.
இப்பயிலரங்கில் ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு சந்திரபாபு நாயுடு, மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளம், பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்பயிலரங்கில் உரையாற்றிய திரு பியூஷ் கோயல், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி சுமார் 70 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் உலகளாவிய கடல் உணவு வர்த்தகத்தில் இந்தியா தற்போது 4 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270579®=3&lang=1
***
SS/IR/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2270869)
வருகையாளர் எண்ணிக்கை : 44