உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேம்பட்ட ஊட்டச்சத்து, வளர்ச்சிக்காக தெற்காசிய கொள்கை தலைமைத்துவ உரையாடலை மத்திய அமைச்சர் திரு சிராக் பஸ்வான் தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 09 JUN 2026 11:03AM by PIB Chennai

தெற்காசியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கம், நீடித்த வளர்ச்சி ஆகியவற்றுக்காக உணவுப் பதனப்படுத்துதல் மேம்பாடு என்ற தலைப்பிலான பிராந்திய உயர்நிலை கொள்கை உரையாடலை மத்திய உணவுப்பதனப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம், உலக வங்கி குழுமத்துடன் இணைந்து குஜராத் மாநிலம் அகமதாபாதில் 2026 ஜூன்  9 அன்று தொடங்கியது.

இந்த இரண்டு நாள் உரையாடலில்  தெற்காசிய நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள், பிரதிநிதிகள் உள்ளிட்ட சுமார் 200 பேர் பங்கேற்றுள்ளனர். பிராந்தியத்தில் உணவுப் பதனப்படுத்துதல் சூழலை வலுப்படுத்துவது, நீடித்த உணவு முறைகளை கட்டமைத்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய மத்திய உணவுப்பதனப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் திரு சிராக் பஸ்வான், உலகளாவிய உணவுப்பதனப்படுத்துல் மையமாக உருவாகி வரும் இந்தியாவின் பங்களிப்புக் குறித்து எடுத்துரைத்தார். மாற்றத்தக்க தெற்காசியாவின் உணவுப் பொருளாதாரத்தில் மதிப்புக்கூட்டுதல், தொழில்நுட்பத்தைப் பின்பற்றுதல், பிராந்திய ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.

வேளாண்மைக்கும்  வளமைக்கும் இடையேயான பாலமாக உணவுப் பதனப்படுத்துதல் திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார். இதில் வேலைவாய்ப்பு உருவாக்கம், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைத்தல், விவசாயிகளின் வருவாயை அதிகரித்தல், உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் பெரும் சாத்தியக் கூறுகள் உள்ளதாக அவர் கூறினார். இந்தியாவின் கொள்கை முன்முயற்சிகள், உள்கட்டமைப்பு மேம்பாட்டு முயற்சிகள் ஆகியவை உலகளாவிய போட்டிமிக்க உணவு மதிப்பு முறைகளை உருவாக்க உதவுகிறது என்று திரு சிராக் பஸ்வான் தெரிவித்தார்.

பின்னர் பேசிய குஜராத் வேளாண் அமைச்சர் திரு ஜித்துபாய் வஹானி,  உணவுப் பதனப்படுத்துதல் துறை, வேளாண் மாற்ற நடவடிக்கையின் இயந்திரமாக உள்ளது என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270559&reg=3&lang=1

***

SS/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2270863) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Gujarati