தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திருத்தப்பட்ட டிஜிட்டல் இணைப்புக்கான சொத்து மதிப்பீட்டு ஒழுங்குமுறைகளின் மதிப்பீட்டுக் கையேட்டை டிராய் வெளியிட்டுள்ளது

प्रविष्टि तिथि: 09 JUN 2026 4:12PM by PIB Chennai

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், திருத்தப்பட்ட டிஜிட்டல் இணைப்புக்கான சொத்து மதிப்பீட்டு ஒழுங்குமுறைகள், 2024-ன் கீழ் டிஜிட்டல் இணைப்பை மதிப்பிடுவதற்கான, திருத்தப்பட்ட மதிப்பீட்டுக் கையேடு 2026-ஐ இன்று (09.06.2026) வெளியிட்டது .

 

டிராய், 2024 அக்டோபர் 25 அன்று ' டிஜிட்டல் இணைப்புக்கான சொத்து மதிப்பீட்டு ஒழுங்குமுறை 2024-ஐ அறிவித்தது . இந்த ஒழுங்குமுறையானது, டிஜிட்டல் இணைப்பைப் பெறுவதில் நுகர்வோர் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, டிஜிட்டல் இணைப்பு மதிப்பீட்டிற்கான ஒரு வழிகாட்டியாக, டிராய் 2025 ஆகஸ்ட் 13 அன்று ' மதிப்பீட்டுக் கையேட்டை' வெளியிட்டது . இந்த மதிப்பீட்டுக் கையேடு, ஒழுங்குமுறையின் விதிகளின் கீழ் டிஜிட்டல் இணைப்பை மதிப்பிடுவதற்கு ஒரு நியாயமான, வெளிப்படையான, தரப்படுத்தப்பட்ட அணுகுமுறையை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பாகச் செயல்பட்டது. இந்த ஆவணம் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் ஒரு விரிவான வழிகாட்டியாக அமைந்தது.

இதில் தெளிவை வழங்குவதற்காக சில பகுதிகளை மறுஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்ற நிலை ஏற்பட்டது.

 

அதன்படி, டிராய், தற்போது திருத்தங்களைச் செய்து, திருத்தப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க, மதிப்பீட்டு கையேடு 2026 வெளியிடப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட மதிப்பீட்டு கையேடு 2026, டிராயின் இணையதளத்தில் ( www.trai.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270718&reg=3&lang=1

(Release ID : 2270718)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2270850) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Kannada