ரெயில்வே அமைச்சகம்
பெங்களூரு-தும்கூர் வழித்தடத்தில், மின் இழுவை அமைப்பை மேம்படுத்த ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
08 JUN 2026 6:13PM by PIB Chennai
கர்நாடகா மாநிலத்தின் மிக முக்கிய ரயில் வழித்தடம் ஒன்றில் ரயில் போக்குவரத்து சேவை, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில், தென்மேற்கு ரயில்வேயின் பெங்களூரு-தும்கூர் பிரிவில், மின் இழுவை அமைப்பை மேம்படுத்த ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 120 வழித்தட கிலோமீட்டர் தொலைவிற்கு தற்போதைய 1x25 கேவி மின் இழுவை அமைப்பு, 2x25 கேவி மின் இழுவை அமைப்பாக மாற்றப்படவுள்ளது. இத்திட்டத்திற்கான செலவு ரூ 162.57 கோடியாகும்.
பெங்களூரு-தும்கூர் பிரிவு, உத்திசார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த அதிக பயன்பாடு கொண்ட வழித்தடமாகும். இந்த வழித்தடம், புனே-ஹூப்பள்ளி-சிக்ஜாஜூர்-பீரூர்-தும்கூர்-பெங்களூரு-சேலம்-கன்னியாகுமரி ஆகிய நகரங்களுக்கு இடையே உள்ள முக்கிய பொருளாதார, தொழில் மையங்களை இணைக்கிறது.
2x25 கேவி இழுவை அமைப்பைச் செயல்படுத்துவது ரயில் இயக்கத்திற்கான மின்சார விநியோகத்தை வலுப்படுத்துவதுடன், இப்பிரிவில் அதிக அளவிலான போக்குவரத்தை, மிகவும் திறம்படக் கையாள முடியும். மேம்படுத்தப்பட்ட இந்த அமைப்பு, அதிக எடையுள்ள சரக்கு ரயில்கள், நீண்ட தொலைவிலான பயணியர் ரயில்களை இயக்குவதற்கு உதவுவதோடு, மின் இழுவை உட்கட்டமைப்பு வசதியின் ஒட்டுமொத்த நம்பகத்தன்மையையும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு பெருநகரப் பகுதி, அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்குச் சேவை செய்யும் முக்கிய ரயில் வழித்தடத்தில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இத்திட்டம் உதவிடும். அதேவேளையில், கர்நாடகா, தென்னிந்தியா முழுவதும் பயணிகள், சரக்கு போக்குவரத்தின் சீரான இயக்கத்திற்கும் இது உறுதுணையாக அமையும். மின்சார உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், கட்டமைப்புத் திறனை அதிகரித்தல், அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள வழித்தடங்களில் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் போன்ற ரயில்வேயின் தொடர் முயற்சிகளுக்கு இந்த மேம்பாட்டு நடவடிக்கை வலுசேர்க்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270343®=3&lang=1
(Release ID: 2270343)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2270435)
आगंतुक पटल : 6