பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மஹாராஷ்டிரா மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 01 MAY 2026 9:14AM by PIB Chennai

மஹாராஷ்டிரா மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அம்மாநில மக்களுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"மகாராஷ்டிர தினத்தை முன்னிட்டு அம்மாநிலத்தில் உள்ள எனது சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள். மகாராஷ்டிரா சமூக விழிப்புணர்வு, கலாச்சார செழுமை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைமையேற்று வழிநடத்திய நீண்ட வரலாற்றைக் கொண்டது. இலக்கியம், நாடகம், இசை, சினிமா முதல் தொழில், கல்வி, அறிவியல், பொதுச் சேவை வரை, இந்தியாவின் வளர்ச்சிக்கு இம்மாநிலம் நீடித்த பங்களிப்பை வழங்கியுள்ளது. மகாராஷ்டிராவின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காகவும், அம்மாநில மக்களின் நலனுக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்."

----

(Release ID: 2257172)

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2270379) आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam