தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அசாமில் லங்காவில் இருந்து நரைன்பூர் ரயில்வே மேம்பாலம் வரை மொபைல் நெட்வொர்க் தரம் குறித்து டிராய் மதிப்பீடு செய்தது

प्रविष्टि तिथि: 08 JUN 2026 5:12PM by PIB Chennai

அசாமில் லங்காவில் இருந்து நரைன்பூர் ரயில்வே மேம்பாலம் வரை 2026 மார்ச் மாதத்தில் மொபைல் நெட்வொர்க் தரம் குறித்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மதிப்பீடு செய்தது.

அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி நெட்வொர்க்குகளின் சிம் கார்டுகளை பயன்படுத்தி சோதனை நடத்தப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் 189.7 கிலோ மீட்டர் தொலைவிற்கும், 7 முக்கிய இடங்களிலும் 2026 மார்ச் 10 முதல் மார்ச் 18 வரை மதிப்பீடு செய்யப்பட்டது. உரையாடல் தரம்உரையாடல் துண்டிப்புஅழைப்பு நேரம்பேச்சின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அத்துடன் தரப் பதிவேற்றம்பதிவிறக்கம் குறித்தும் இச்சோதனையில் ஆய்வு செய்யப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள டிராய் பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இது நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270290&reg=3&lang=1

***

TV/IR/LDN/SH


(रिलीज़ आईडी: 2270366) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी