அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத்துறை இருவார தூய்மைப் பணியை மேற்கொண்டது
प्रविष्टि तिथि:
08 JUN 2026 2:35PM by PIB Chennai
மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கத்தின் ஒரு பகுதியாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத்துறை புதுதில்லியில் உள்ள தலைமையகம், தமது தன்னாட்சி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் 2026 மே 1 முதல் 15 வரை இருவார தூய்மைப் பணிகளை மேற்கொண்டது.
2026 மே 1 அன்று புதுதில்லியில் உயிரி தொழில்நுட்பத்துறையின் அலுவலகத்தில் அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்ற தூய்மை உறுதிமொழியுடன் பணிகள் தொடங்கியது.
இந்த தூய்மைப் பணியில் சிறப்பாக ஈடுபட்ட தேசிய விலங்கு உயிரி தொழில்நுட்ப நிறுவனம், தேசிய வேளாண் உணவு உயிரி தொழில்நுட்ப நிறுவனம், உயிரிவளங்கள், நீடித்த மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றிற்கு 2026 ஜூன் 2 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உயிரி தொழில்நுட்பத்துறை செயலாளர் பரிசுகளை வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270225®=48&lang=1
***
SS/IR/LDN/KR
(रिलीज़ आईडी: 2270256)
आगंतुक पटल : 10