மத்திய அமைச்சரவை
ஐ.நா. பருவநிலை மாற்றம் குறித்த இலக்கில் இந்தியாவின் தேசிய அளவிலான பங்களிப்பிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
25 MAR 2026 5:35PM by PIB Chennai
இந்தியாவின் நடவடிக்கையை வலுப்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாக, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 2031 முதல் 2035 வரையிலான காலகட்டத்தில் ஐ.நா. பருவநிலை இலக்கில் இந்தியாவின் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது, பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் நாட்டின் இலக்கை மேம்படுத்துவதோடு, நிலையான வளர்ச்சி, பருவநிலை நீதிக்கான அதன் உறுதிப்பாட்டையும் வலுப்படுத்துகிறது.
2031-35-ம் ஆண்டுக்கான இந்தியாவின் தேசிய பங்களிப்பு இலக்கு (NDC), 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்படுகிறது. இது 2047-ம் ஆண்டுக்கான ஒரு இலக்கு மட்டுமல்ல. வருங்கால சந்ததியினருக்காக ஒரு வளமான, பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய இந்தியாவை உருவாக்க உடனே செயல்படுவதற்கான ஒரு உறுதிப்பாடாகும். இந்தியாவின் அடுத்தடுத்த இலக்குகள், அதன் முந்தைய உறுதிமொழிகளின் அடிப்படையில் அமைந்துள்ளன. அவற்றில் பல, திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பே அடையப்பட்டுள்ளன. இது, பருவநிலை நடவடிக்கைகளை நிறைவேற்றுவதில் நாட்டின் தொடர்ச்சியான சாதனையைப் பிரதிபலிக்கிறது.
2031 முதல் 2035 வரையிலான காலகட்டத்திற்கான இந்தியாவின் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது, குறைந்த கார்பன் வெளியேற்றம், பருவநிலை மாற்றங்களைத் தாங்கும் திறன் கொண்ட எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் பயணம் ஆகியவற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. அத்துடன், பருவநிலை மாற்ற நடவடிக்கைகளில் உலகளாவிய முன்னணி நாடாக இந்தியாவின் பங்கை இது மேலும் வலுப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2245209®=3&lang=2
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2270066)
வருகையாளர் எண்ணிக்கை : 53
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Bengali
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam