பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாநில நிதி ஆணையங்களுக்கான தரவுத்தொகுப்புகள் குறித்த அறிக்கை 8-ம் தேதி வெளியிடப்படுகிறது

प्रविष्टि तिथि: 06 JUN 2026 10:19AM by PIB Chennai

மாநில நிதிக் ஆணையங்களுக்கான தரவுத்தொகுப்புகள் குறித்து அது தொடர்பான குழுவின் அறிக்கை, 2026 ஜூன் 8-ம் தேதி புதுதில்லியில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் வெளியிடப்பட உள்ளது. மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி. அனந்த நாகேஸ்வரன், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், தேசிய பொது நிதி - கொள்கை நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் மனிஷ் குப்தா, மூத்த அதிகாரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. அறிக்கை வெளியீட்டைத் தொடர்ந்து, வலுவான உள்ளாட்சிக்கும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கும், தரவு சார்ந்த கொள்கை உருவாக்கம், சிறந்த நிதி நிர்வாகம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து தலைமைப் பொருளாதார ஆலோசகர் சிறப்புரை ஆற்றுவார்.

 

இந்தியாவில் நிதிப் பரவலாக்கத்திற்கான ஆதாரத் தளத்தை வலுப்படுத்துவதில் அரசின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பில் இந்த அறிக்கை வெளியீடு ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.  மாநில நிதி ஆணையங்கள், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் நிதி நிலையை ஆய்வு செய்வதற்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வளங்களைப் பகிர்ந்தளிப்பதற்கான கொள்கைகளைப் பரிந்துரைப்பதற்கும் அதிகாரம் பெற்ற முதன்மை அரசியலமைப்பு அமைப்புகளாக செயல்படுகின்றன. இந்த ஆணையங்கள் இந்த அரசியலமைப்புப் பொறுப்பை நம்பகத்தன்மையுடனும் நிறைவேற்றுவதற்கு, உள்ளாட்சி அமைப்புகளின் நிதி, மக்கள்தொகை, உள்கட்டமைப்பு, சேவை வழங்கல், சொத்து மேலாண்மை குறித்த நம்பகமான தகவல்கள் அடங்கிய தரவுகள் இன்றியமையாதது.

 

இது தொடர்பான அறிக்கை, அத்தியாவசியத் தரவுத் தொகுப்பை வழங்குவதோடு, உள்ளூர் நிலையில் நிதிப் பகுப்பாய்வை முன்வைக்கிறது. இது மாநில அரசுகள், மாநில நிதிக் குழுக்கள், பொருளாதார ஆய்வாளர்கள் என அனைவருக்கும் ஒரு அதிகாரப்பூர்வமான தகவல் அம்சமாகப் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

(Release ID : 2269683)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2269709) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , Urdu , हिन्दी , Gujarati