தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சூரத் நகரில் புதிய இஎஸ்ஐ மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 JUN 2026 6:55PM by PIB Chennai

நாட்டின் அமைப்புசார்ந்த  தொழிலாளர்களுக்குத் தரமான சுகாதார சேவையை உறுதி செய்வதற்கான அரசின் தொடர் முயற்சிகளில் மற்றுமொரு மைல்கல்லாக, இன்று சூரத்தில் 220 படுக்கைகள் கொண்டதொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழக (இஎஸ்ஐசி) மருத்துவமனையை பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இது தவிர ₹18,800 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டன.

சூரத்தில் 8.60 ஏக்கர் வளாகத்தில் ₹216 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை, இந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 3.20 லட்சம் நபர்களுக்கும், ஏறத்தாழ 12.16 லட்சம் பயனாளிகளுக்கும் ஒரு உயிர்நாடியாக விளங்கும். சூரத் ரயில் நிலையத்திலிருந்து வெறும் 20 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு மற்றும் மகளிர் நலன், புற்றுநோயியல், மனநலன், கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் பராமரிப்பு உள்ளிட்ட விரிவான சிறப்புப் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. இவற்றுடன் மேம்பட்ட கதிரியக்கவியல், நோயியல் மற்றும் 24 மணி நேர அவசர சேவைகளும் இங்கு வழங்கப்படுகின்றன.

சூரத் பிராந்தியத்தில் சுகாதாரச் சூழலியலை மேலும் வலுப்படுத்துவதில், உழைக்கும் வர்க்கத்தினரின் நலனுக்கான மத்திய அரசின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு இந்த மருத்துவமனையின் திறப்பு ஒரு சான்றாக அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269453&reg=3&lang=2

(Release ID: 2269453)

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2269625) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati