இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இளையோர்- மைபாரத் இளையோர் மாநாடு’ ஜூன் 6 அன்று நடைபெறவுள்ளது
प्रविष्टि तिथि:
05 JUN 2026 11:07AM by PIB Chennai
2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்பதை நோக்கிய பயணத்தின் இயக்குசக்தியாக இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள மைபாரத் அமைப்பு ‘வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இளையோர்- மைபாரத் இளையோர் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. புதுதில்லியில் உள்ள தியாகராஜ் விளையாட்டரங்கில் 2026 ஜூன் 6 அன்று இது நடைபெறும்.
மாணவர்கள், இளம் தொழில்முறையாளர்கள், இளம் பெண்கள், தொழில்முனைவோர், புதிய கண்டுபிடிப்பாளர்கள், வளர்ந்து வரும் தலைவர்கள், சாதனையாளர்கள் உட்பட நாடு முழுவதிலுமிருந்து 6,000-க்கும் அதிகமான இளைஞர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள்.
இந்த நிகழ்வை பிரபல தலைவர்கள், விருந்தினர்கள் ஆகியோருடன் இணைந்து மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா ஆகியோர் தொடங்கி வைப்பார்கள்.
ஒரே வாரத்தில் அதிகபட்ச பயனாளர்கள் பங்கேற்ற இணையதள விநாடி வினா போட்டி நடத்தி பின்னர் உலக சாதனை நடத்தியதையும் இந்த நிகழ்வில் மைபாரத் கொண்டாடும். இந்த விநாடி வினா போட்டியில் 28 மாநிலங்கள் 8 யூனியன் பிரதேசங்களிலிருந்து 50 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்ற நிலையில், 3,90,812 பங்கேற்பாளர்கள் வெற்றிகரமாக போட்டியை நிறைவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269178®=3&lang=1
***
SS/SMB/KPG/KR
(रिलीज़ आईडी: 2269261)
आगंतुक पटल : 14