பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வெனிசுலா நாட்டின் தற்காலிக அதிபர் பிரதமரைச் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 04 JUN 2026 9:35PM by PIB Chennai

வெனிசுலா நாட்டின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்துத் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர், இரு தலைவர்களும் எரிசக்தி, முக்கிய கனிமங்கள், தொழில்நுட்பம், விவசாயம், சுகாதாரம் மற்றும் இருநாட்டு மக்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

லத்தீன் அமெரிக்காவில் வெனிசுலா ஒரு மதிப்புமிக்க கூட்டாளி என்று குறிப்பிட்ட திரு  நரேந்திர மோடி, அந்த நாட்டுடனான நெருங்கிய ஒத்துழைப்பு உலகின் தெற்கு பகுதிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வலியுறுத்தினார். இரு நாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காக இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றும் பிரதமர் உறுதிப்படத் தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வெனிசுலா நாட்டின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை நேரில் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான எரிசக்தித் துறை, முக்கிய கனிமங்கள், தொழில்நுட்ப மேம்பாடு, வேளாண் உற்பத்தி, சுகாதாரக் கட்டமைப்பு, இருநாட்டு மக்களுக்கு இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து மிகவும் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் ஒரு மதிப்புமிக்க கூட்டாளியாக விளங்கும் வெனிசுலா நாட்டுடனான நமது நெருக்கமான ஒத்துழைப்பானது உலகின் தெற்கு நாடுகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. இருநாட்டு மக்களின் பரஸ்பர நலன்களை முன்னிறுத்தி நமது உறவை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(Release ID: 2269100)

****

TV/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2269134) வருகையாளர் எண்ணிக்கை : 61