பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் உள்ளக பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

प्रविष्टि तिथि: 04 JUN 2026 5:02PM by PIB Chennai

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகஸ்ட்-செப்டம்பர் காலத்திற்கான இரண்டு மாத உள்ளக பயிற்சித் திட்டத்திற்கு (Internship) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியாவின் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த 21 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண் மாணவிகள், ஆராய்ச்சியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். இத்திட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு கட்டப் பயிற்சிக்கான விண்ணப்பங்களை, அப்பயிற்சி தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக, அந்த மாதத்தின் 1 முதல் 10-ம் தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்த கட்ட பயிற்சிக்கு விண்ணப்பிக்க இயலாது. இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டின் இளம் திறமையாளர்களைக் கண்டறிந்து, அரசின் கொள்கை உருவாக்க நடைமுறைகளில் அவர்களை ஈடுபடுத்துவதை அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது. தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்கள் அமைச்சகத்தின் தற்போதைய திட்டங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளலாம். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, அதிகாரமளித்தலுக்காகப் பணியாற்றும் உயர் அதிகாரிகளுடனும் நேரடியாகக் கலந்துரையாடி தங்களின் மேலான கருத்துக்களை கொள்கை அறிக்கைகளாக வழங்க இத்தளம் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268939&reg=48&lang=1

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2269097) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati