கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வாரணாசியில் 2வது பிரிக்ஸ் கலாச்சார பணிக்குழு கூட்டம் தொடங்கியது

प्रविष्टि तिथि: 04 JUN 2026 7:03PM by PIB Chennai

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், பிரிக்ஸ் அமைப்பின் 2-வது கலாச்சார பணிக்குழு கூட்டம் இன்று தொடங்கியது. இந்திய கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் விவேக் அகர்வால் தலைமையில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில் பிரேசில், சீனா, இந்தோனேசியா, ஈரான், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் நேரில் பங்கேற்றனர். எத்தியோப்பியா, எகிப்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இணையவழியில் பங்கேற்றனர்.

 

இக்கூட்டத்தில் இரண்டு முக்கியக் குழு விவாதங்கள் நடைபெற்றன. முதலாவதாக, விவேக் அகர்வால் ஒருங்கிணைப்பில், உள்ளடக்கிய வளர்ச்சி, சமூக ஒற்றுமை மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் 'படைப்பாற்றல் பொருளாதாரத்தின்'  பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது. இரண்டாவதாக, டாக்டர் சச்சிதானந்த் ஜோஷி ஒருங்கிணைப்பில், கலைத்துறையில் 'செயற்கை நுண்ணறிவு' பயன்பாடு, பதிப்புரிமைப் பாதுகாப்பு  மற்றும் அதன் நன்னெறிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 

நிகழ்வின் நிறைவாக, இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரப் பெருமையை விளக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய இசை மற்றும் 'கலர்ஸ் ஆஃப் இந்தியா' என்ற பெயரில் செவ்வியல் மற்றும் நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இக்கூட்டம் நாளையும் (ஜூன் 5) தொடரவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269024&reg=3&lang=1

செய்தி அடையாள எண்:2269024

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2269095) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu