அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

பசுமை வேதியல் அடிப்படையிலான மருந்து உற்பததி தொழில்நுட்பங்களை வர்த்தகமயமாக்குதல்

प्रविष्टि तिथि: 04 JUN 2026 4:07PM by PIB Chennai

உலக அளவில் மருந்து உற்பத்தியில் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்து வரும் நிலையில், மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் மினாக்ஸிடில் ட்ரானக்ஸ்சாமிக் அமிலம், டெக்வாலினியம் குளோரைடு அவற்றின் இடைநிலைப் பொருட்கள், லிப்போசோம்கள் மருந்துகளின்  உற்பத்தித் திட்டத்திற்காக சென்னையைச் சேர்ந்த பயோனீம்டெக் என்ற தனியார் நிறுவனத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் இறக்குமதிக்கு மாற்றாக மருந்து உற்பத்தி, சுகாதாரப் பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு முக்கியப் பங்களிக்கும்.

மருந்து உற்பத்திக்கான மூலப்பொருட்கள், மேம்பட்ட மருந்து விநியோக அமைப்புகளின் உற்பத்திக்கான உள்நாட்டு பசுமை வேதியல் தொழில்நுட்பங்களை வர்த்தகமயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழில்நுட்பப் பயன்பாட்டின் மூலம் மருந்துகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தொழில்நுட்பம் அடிப்படையிலான இந்த முயற்சி உற்பத்தித் திறனை மேம்படுத்துவதுடன் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

மருந்து உற்பத்திக்குத் தேவைப்படும் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதைக் குறைக்கும் வகையில், இத்தகைய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. குறைந்த செலவில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் தொகுப்பு வழிமுறைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம் கழிவு உருவாக்கம், செயல்முறை சார்ந்த சிக்கல்களுக்குத் தீர்வு காணும் அதே வேளையில் உயர் தரத்திலான தூய்மையான தயாரிப்புகளை வழங்கும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268897&reg=3&lang=1

****

TV/SV/KPG/SH

 


(रिलीज़ आईडी: 2269077) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी