பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கல்பாக்கத்தில் முன்மாதிரி வேக ஈனுஉலையில் முக்கிய நிலையை அடைந்ததற்காக விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 06 APR 2026 10:14PM by PIB Chennai

கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலையில் முக்கிய நிலையை வெற்றிகரமாக அடைந்ததற்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டின் விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் இன்று (06.04.2026) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா தது சிவில் அணுசக்திப் பயணத்தில் ஒரு முக்கியமான படியை நோக்கி சென்றுள்ளது என்றும், இது அதன் அணுசக்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்றும் பிரதமர் கூறியுள்ளார். அது பயன்படுத்தும் எரிபொருளை விட அதிக எரிபொருளை உருவாக்கும் திறன் கொண்ட இந்த மேம்பட்ட அணு உலை, நாட்டின் வலுவான அறிவியல் திறன்களையும் உறுதியான பொறியியல் நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சாதனை, அணுசக்தித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் இந்தியாவின் பரந்த அளவிலான தோரியம் இருப்புகளைத் திறம்படப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கிறது என்றும் திரு மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இது நாட்டிற்குப் பெருமைக்குரிய தருணம் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த முக்கியத்துவத்தை அடைவதில் பங்கேற்ற அனைவரது முயற்சிகளையும், அர்ப்பணிப்பையும் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது;

இன்று, இந்தியா தனது அணுசக்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முன்னோக்கி, து சிவில் அணுசக்திப் பயணத்தில் ஒரு முக்கியமான அடியை எடுத்து வைக்கிறது.

கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை முக்கிய நிலையை எட்டியுள்ளது.

அது பயன்படுத்தும் எரிபொருளை விட அதிக எரிபொருளை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த மேம்பட்ட அணு உலை, நமது அறிவியல் திறனின் வலுவையும், நமது பொறியியல் முயற்சியின் வலிமையையும் பிரதிபலிக்கிறது. இது, இத்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் நமது பரந்த அளவிலான தோரியம் இருப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு முக்கியப் படியாகும்.

இந்தியாவுக்கு ஒரு பெருமைக்குரிய தருணம். நமது விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் வாழ்த்துகள்.

***

SS/IR/KPG/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2268867) வருகையாளர் எண்ணிக்கை : 43