மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
விசாகப்பட்டினத்தில் தேசிய கடல் உணவு ஏற்றுமதி பயிற்சி பட்டறை நடைபெறவுள்ளது
प्रविष्टि तिथि:
03 JUN 2026 3:24PM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசுடன் இணைந்து, 2026 ஜூன் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் ஆந்திரப் மாநிலம் விசாகப்பட்டினத்தில் தேசிய கடல் உணவு ஏற்றுமதி குறித்த இரண்டு நாள் பயிற்சி பட்டறையை நடத்தவுள்ளது. இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
இந்நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச முதல்வர் திரு. சந்திரபாபு நாயுடு, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு மற்றும் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் துறை அமைச்சர் திரு. சிராக் பாஸ்வான் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இவர்களுடன் மத்திய இணை அமைச்சர்கள் பேராசியர் எஸ்.பி. சிங் பாகெல் மற்றும் திரு. ஜார்ஜ் குரியன் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உயர் அதிகாரிகள், கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம், இந்தியத் தர நிர்ணய அமைவனம், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், நபார்ட் வங்கி மற்றும் கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் இப்பயிற்சி பட்டறையில் கலந்துகொள்கின்றனர்.
இப்பயிற்சி பட்டறை, மாநில வாரியான ஏற்றுமதி உத்திகளைக் கண்டறிதல், கடல் உணவுகளில் மதிப்பு கூட்டுதல், தரக் கண்காணிப்பு முறைகளை மேம்படுத்துதல், புதிய தொழில்முனைவோர் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஏற்றுமதி கட்டமைப்பில் இணைப்பது குறித்து விவாதிக்கும்.
இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி கடந்த 2025-26 நிதியாண்டில் 73,890.46 கோடி ரூபாயாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. இத்துறை தற்போது 1 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதியை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய மீன் உற்பத்தி மற்றும் கடல் உணவு ஏற்றுமதி மாநிலமாக விளங்கும் ஆந்திரப் பிரதேசத்தில், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் ஒருங்கிணைந்த நீர்வாழ் உயிரின பூங்காக்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை நவீனப்படுத்தப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268348®=3&lang=1
(Release ID: 2268348)
****
TV/EA/SH
(रिलीज़ आईडी: 2268684)
आगंतुक पटल : 5