திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
அடிப்படை புத்தாக்குநர்கள், தொழில்முனைவோருக்கான தேசிய அளவிலான முன்முயற்சியாக ‘நவச்சார் மந்திரா’வை மத்திய அமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
03 JUN 2026 5:04PM by PIB Chennai
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம், நாடு முழுவதும் வளர்ந்து வரும் அடிப்படை நிலையில் உள்ள தொழில்முனைவை வலுப்படுத்துவது குறித்தும், புத்தாக்குநர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ‘நவச்சார் மந்திரா’ என்ற தேசிய முன்முயற்சியை இன்று தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம், தேசிய தொழில்முனைவு மற்றும் சிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. மேலும், ஐஐடி தில்லியின் புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கான அறக்கட்டளை தொழில்நுட்ப அறிவுசார் கூட்டு நிறுவனமாகச் செயல்படுகிறது.
இந்த முன்னெடுப்பை, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை இணையமைச்சரும், கல்வித் துறை இணையமைச்சருமான திரு ஜெயந்த் சௌத்ரி, ஐஐடி தில்லியில் கொள்கை வகுப்பாளர்கள், புத்தொழில் சூழல் தலைவர்கள், கல்வி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறைக்கான இணையமைச்சர் திரு. ஜெயந்த் சௌத்ரி, “உலக நாடுகள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டும் பயன்படுத்துவதுடன், இந்தியாவில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த வேண்டும். அதுவே நவச்சார் மந்திரத்தின் உண்மையான சாராம்சம். செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர், பசுமை எரிசக்தி, உயிரித் தொழில்நுட்பம், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு அல்லது மேம்பட்ட உற்பத்தி அனைத்திலும், உலகளவில் மாற்றத்திற்கான இந்தியாவின் அறிவுசார் முத்திரையுடன் இருக்க வேண்டும். சவால்களின் அளவு, பன்முகத்தன்மை, உலக அளவில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் திறன் கொண்ட இளைஞர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது” என்று திரு. ஜெயந்த் சௌத்ரி கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268445®=3&lang=1
(Release ID: 2268445)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2268680)
आगंतुक पटल : 8